செய்தி: திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காயல்பட்டினத்தில் அமைதிப் பேரணி & இரங்கல் கூட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (India )[14 August 2018] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46254
எங்கும் எதிலும் எப்போதும் நீயே தெரிகிறாய்
என்ன செய்தாய் எங்களை நெஞ்சிலுக்க வைத்துவிட்டாயே.
வானளாவிய சென்னை வானூர்தி நிலையத்தை கண்டேன் அது உனது உற்ற தோழர் மன்மோகன்சிங்கிடம் வாதாடி அயலக தமிழர்க்கு நீ கொடுத்த பரிசாக நினைத்தேன்.
உனது சமாதி விஷயத்தில இப்போது துக்க காலத்தில் கலகக்காரர்கள் படுத்தும் பாட்டிலும் உனது தமயன் தளபதி காக்கும் பொறுமையில் உன்னை உணர்ந்தேன்
மிதந்து செல்லும் அரசு பேருந்தில நீ எழுதி வைத்த வள்ளுவனின குரலை படித்தேன் அதில் உனது தமிழ் பிடிப்பை மெய்சிலிர்த்தேன்.
வடக்கு மதவெறி வஞ்சனையில் வீழ்ந்து கிடைக்கும் காலத்தில் தமிழகம் மதசார்பின்மையில் மலர்ந்து தலைகிறது அதில் உனது திராவிட நெடியை முகர்ந்தேன்.
மருத்துவமனையை கண்டேன் உன் போல் ஆரோக்கியத்தை பேணினால் அங்கு அடிக்கடி செல்ல தேவையில்லை என்று புரிந்து கொண்டேன்.
மலேசிய மாவீரன் மாகாதீரின் அருங்காட்சியகத்தில் நீ அவருக்கு கொடுத்து வள்ளுவ தேரை கண்டேன் அதில் உனது கடல் கடந்த புகழை பார்த்தேன்.
எண்பதுகளில் கிராமம் போல இருந்த சென்னை இன்று சர்வேதேச நகரமாய் காண்கிறேன் அதில் உனது தொலை நோக்கு பார்வை என நினைத்துக்கொண்டேன்.
இந்த பத்து நாட்களில் உன்னோடு இருந்தவர்கள் நினைவலைகளை அசை போடுகிறார்கள் நீ ஒரு சரித்திரம் என தெரிந்து கொண்டேன்.
என் ஆசான் அண்ணாவை வாழ்நாளில் காண கொடுக்கவில்லையே என வாழ்நாளில் ஏங்கியதுண்டு அதை உன் உருவில் கண்டு திருப்தி அடைந்தேன்.
என்னடா எவன் இப்படி அறுகிறானே காயல் நெட் ஒருவேளை நினைக்கலாம் இவ்வேளை விட்டால் இம்மாமனிதரை நன்றி கூற காலம் இடம் தராது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross