செய்தி: காயல்பட்டினத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி! மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...DEATH IS THE PENALTY FOR DRUG TRAFFICKING posted bymackie noohuthambi (kayalpatnam )[26 August 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46259
அரபகத்துக்கு சென்றவர்களுக்கு இன்றும் செல்பவர்களுக்கும் விமான நிலையத்தில் ஒரு அட்டை வழங்கப் படும். அதிலே நமது கடவு சீட்டு முதல் எல்லா விவரங்களையும் குறிக்க வேண்டும். அந்த அட்டையை கையில் எடுத்தவுடன் சிவப்பு எழுத்துக்களால் குறிப்பிடப் பட்டிருக்கும் வசனம்தான் DEATH IS THE PENALTY FOR DRUG TRAFICKING என்ற கடுமையான எச்சரிக்கை.
ஆனால் இது சர்வ சாதாரணமாக வெளிநாடுகளில் நடக்கும் விஷயம் இந்தியாவின் தென்கோடியில் இருக்கும் ஒரு புனித நகரை எப்படி தொற்றிக் கொண்டது என்பதனை நினைக்கும்போது வருத்தப் படாமல் இருக்க முடியுமா...
காவல் துறை அதிகாரி அவர்கள் பேசும்போது 2011 இல் நமது ஊருக்கு வந்து ரைட் நடத்தி சிலரை கைது செய்ததாக குறிப்பிட்டார் அப்படியானால் சுமார் 10 வருடங்களாக இந்த முஸீபத் நமதூரில் வந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வருத்தம் இன்னும் அதிகமாகிறது. எங்கே செல்கிறார்கள் நம் இளைஞர்கள்....
வீதிகளில் கிடக்கும் சாதாரண முள்ளைக்கூட அகற்றி மக்கள் அதை மிதித்து காயமடைந்து விடாமல் காப்பதும் ஒரு தர்மம் ஸதகா என்று சொல்லும் மார்க்கத்துக்கு சொந்தக் காரர்கள் நாம் எப்படி நம் இளைஞர்கள் இந்த இழி நிலைக்கு ஆளானார்கள். அல்லாஹு அக்பர்.
ஈமான் கொண்டவர்களே உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நகர நெருப்பிலிருந்து பாது காத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான் மாற்றம் நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும் ஒவ்வொரு பெற்றோரும் மிக்க கவனமாக நமது மக்களை அவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
காவல் துறை அதிகாரி அவர்கள் சொல்வதைப்போல மதுக் கடைகளை அரசு திறந்தாலும் அவர்கள் யாரையும் இங்கே வந்து குடியுங்கள் என்று அழைப்பதில்லை . ஆனாலும் ஆங்கிலத்திலே TEMPTING என்றும் ATTEMPTING என்றும் இரு வார்த்தைகள் உள்ளன . நாம் தீயதை நோக்கி சொல்லாவிட்டாலும் தீயவை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும்போது நம்மையும் அது இழுக்கும், புகையிலை சிகரெட் பழக்கமும் அப்படிதான். எந்த விஷயம் மனிதனுக்கு தீமை தருமோ அதுவெல்லாம் ஹராம்தான் என்பதை நமது இளைஞர்களுக்கு புரியவைக்க வேண்டும்
ஹெல்மெட் பிரச்சினை, ஒரு இருசக்கர வண்டியில் மூன்று நான்குபேர் அமர்ந்து செல்வதும் கூட நமக்கு தீமை தருகிறது என்பதை தினசரி கண்கூடாக கண்டு வருகிறோம். ஆக ஒட்டுமொத்தமாக இந்த தீமைகளை நமதூரிலிருந்து களைய இந்த மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
தமிழகத்தில் புகை பழக்கம் அதிக விழுக்காடு இருப்பதாகவும் வருடா வருடம் நமது தமிழகம் அதில் முன்னிலை வகிக்கிறது என்ற நாளிதழ் செய்திகளும் இன்னும் வருத்தமளிக்கின்றன...பள்ளி மாணவர்கள் மத்ரஸா மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி ஆக்கப் பணிகளை மேற்கொண்டிருப்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.
என்ன இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தடுத்திருக்கும் எல்லா தீமைகளிலிருந்தும் நாம் விலகி இருக்க அல்லாஹ்வே நமக்கும் நமது மக்களுக்கும் ஹிதாயத் தரவேண்டும். நமது ஐவேளை தொழுகைகளில் தஹஜ்ஜத் போன்ற உபரி வணக்கங்களின்போதும் நாம் அல்லாஹ்விடம் இந்த போதைக்கு அடிமையாகாமல் நமது சந்ததிகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற து ஆ வை அதிகமதிகம் கேட்க வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன்.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross