செய்தி: மெகா | நடப்பது என்ன குழுமம் நடத்திய பாராட்டு விழாவில், டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு “PRIDE OF KAYALPATTINAM” விருது வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழும் காலத்தில் வாழ்த்துங்கள் விருதுகள் வழங்குங்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[21 September 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46269
நாள் மறைந்த பிறகு எனக்கொரு தாஜ்மஹால் கட்ட வேண்டாம். நான் வாழும் காலத்தில் நிம்மதியாக வாழ ஒரு குடிசை கட்டி தாருங்கள் என்று ஒரு புது கவிதை சொல்கிறது.
அமர்க்களமாக அரங்கம் நிறைந்த விழாவாக நடந்து முடிந்த அந்த நிகழ்வு மனநிறைவை தந்தது காயல்பட்டினம் மருத்துவர்களை ஒரே மேடையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மருத்துவ சேவையாற்றி நம் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் மருத்துவர்களையும் நினைவுக்கு கொண்டு வந்த நெகிழ்ச்சியான விழா அது
நினைவலைகளும் உணர்வலைகளும் சிரிப்பலைகளும் நிறைந்த ஒரு கலவையான நிகழ்ச்சியாக மாற்றி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மருத்துவர்கள்
மருத்துவர் அஷ்ரப் மருத்துவர் பாவநாச குமார், மருத்துவர் இத்ரீஸ், மருத்துவர் தம்பி மருத்துவர் ஜாபர் சாதிக் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த எல்லா மருத்துவர்களும் சில மணித்துளிகள் மட்டுமே பேசினாலும் எல்லாமே தேன் துளிகள். கருக்கலில் தொழுகை நேரம் வந்ததால் அத்துடன் மருத்துவர்கள் பேசியது முடிந்துவிட்டாலும் இன்னும் சொல்ல மாட்டார்களா என்ற ஆதங்கம் எல்லோரிடமும் தென்பட்டது.
என்னதான் மருத்துவர்கள் அதிசயங்கள் நிகழ்த்தினாலும் அல்லாஹ்வின் தொழுகைக்கான அழைப்பொலி வந்தால் அதுதான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை அவர்கள் உணர்த்த தவறவில்லை.
மருத்துவர்கள் தங்களால் முடிந்தவரை ஒரு நோயாளியை மரணத்திலிருந்து காப்பாற்றவே முயற்சி செய்வார்கள் அவர்களையும் மீறிய ஒரு சக்தி - அல்லாஹ்வின் முடிவே இறுதியானது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அப்போது அவர்கள் ஒரு குறிப்பை எழுதி வைத்து விட்டு அந்த நோயாளியிடமிருந்து விடை பெற்றுக் கொள்வார்கள். அதுதான் G .O .K - GOD ONLY KNOWS. ஆங்கிலத்திலே இறைவனை அழைக்கும் பெயராக GOD என்ற வார்த்தையை மிக அழகாக உருவாக்கி இருக்கிறார்கள். GENERATOR - OPERATOR - DESTROYER உருவாக்குபவன் இயக்குபவன் முடித்து வைப்பவன்.
மருத்துவம் மகத்துவம் மனிதத்துவம் இவற்றை அடிப்படையாக கொண்ட மனித சேவை இப்போது வர்த்தகம் என்ற புதிய பரிணாமத்துக்குள் புகுந்து கொண்டதால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த அவல நிலையிருந்து நமதூரை மீட்டெடுக்க இந்த மருத்துவர்கள் சங்கமம் ஒரு சபதம் எடுத்துள்ளதை மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்.
வீடுதேடி வந்து மருத்துவம் செய்ய இத்ரீஸ் டாக்டர் அவர்கள் நான் தயார் என்று சூளுரைத்த போது கரகோஷம் விண்ணை பிளந்தது.
டாக்டர் அஷ்ரப் அவர்களுக்கு PRIDE OF KAYALPATNAM விருது ஒரு சாதாரண விருது ஆனாலும் அதுதான் அவர்களுக்கு பெருமை தரும் விருது. அவர்களை போன்றவர்களுக்கு பாரத ரத்னா என்ற தேசிய விருது இனிமேலும் தாமிதிக்காமல் கொடுக்கப் படவேண்டும் என்பதே நமது அவாவும் து ஆ வும்.
வாழும் காலத்திலேயே இப்படிப் பட்டவர்கள் வாழ்த்தப் படவேண்டும் அவர்கள் சேவைகள் அங்கீகரிக்கப் படவேண்டும். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞர்களை பாராட்டுகிறோம்.
உழைக்கும் தோழர்களே இளைஞர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள் அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross