மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு “PRIDE OF KAYALPATTINAM” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
*மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA)* ஏற்பாட்டில் *மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)* மற்றும் *அவசரகால மருத்துவ உதவித்திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT)* அறிமுகம் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகியவை - *ஆகஸ்ட் 19 ஞாயிறு* அன்று, *ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)* வளாகத்தில், மறைந்த *டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடையில்*, மாலை 4:45 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்ட 20 மூத்த மருத்துவர்களில், *6 மருத்துவர்கள் சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள் ஆவார்கள்.*
*காயல்பட்டினம் மக்களுக்காக - பல்வேறு வகைகளில், பல்லாண்டுகளாக* தொடர்ந்து சேவையாற்றி வரும் 14 மூத்த மருத்துவர்களுக்கு *YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES* விருது, இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
அவர்களுக்கான விருதினை - _சிறப்பு விருந்தினரும், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் முன்னாள் தலைவருமான_ *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* மற்றும் _மூத்த மருத்துவர்_ *டாக்டர் முஹம்மது லெப்பை* ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* - *காயல்பட்டினம் மருத்துவ அறக்கட்டளையின் (KAYALPATNAM MEDICAL TRUST; KMT)* முன்னாள் தலைவர் ஆவார்.
மேலும் - எல்.கே.மேனிலைப்பள்ளியினை நடத்தும் *எல்.கே.எஸ். கல்வி அறக்கட்டளையின் (LKS EDUCATIONAL TRUST)* தலைவரும் ஆவார்.
திருச்சி மாநகரில் *ஆய்ஷா மருத்துவமனை*யை நிறுவி - பல்லாண்டுகாலமாக மருத்துவ சேவையாற்றிவரும் *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* அவர்களுக்கு *MEDICAL COUNCIL OF INDIA (MCI)* என்ற மத்திய அரசு அமைப்பின் உயரிய *B.C.ROY* விருது - 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்விருதினை - _அப்போதைய ஜனாதிபதி_ *திருமதி பிரதிபா பட்டில்* புதுடில்லியில் வழங்கினார்.
*2011 - 2012* காலகட்டத்தில் *தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்* அமைப்பின் தலைவராக செயல்புரிந்த *டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப்* அவர்களுக்கு, இவ்வாண்டு ஜூலை மாதம் - *வாழ்நாள் சாதனை விருது (LIFETIME ACHIEVEMENT AWARD)*, *INDIAN MEDICAL ASSOCIATION (IMA) - TAMILNADU CHAPTER* அமைப்பின் சார்பாக வழங்கபப்ட்டது. இவ்விருதினை _மாநில சுகாதாரத்துறை அமைச்சர்_ *திரு விஜயபாஸ்கர்* வழங்கினார்.
*ஊடக பேட்டிகள் போதும், பொது மேடைகளில் பேசும்போதும் தனது பூர்வீகம் காயல்பட்டினம் என பெருமையாக உரைக்கும் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் அவர்களுக்கு, ஆகஸ்ட் 19 அன்று நடந்த நிகழ்ச்சியில், _PRIDE OF KAYALPATTINAM_ என்ற விருதினை, _காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர்_ திருமதி ஐ.ஆபிதா சேக்* வழங்கினார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 28, 2018; 3:30 pm]
[#NEPR/2018082803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|