மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், காயல்பட்டினம் நகரில் சேவையாற்றிய 20 மூத்த மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளதோடு, அவசரகால மருத்துவ உதவித் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES) மற்றும் அவசரகால மருத்துவ உதவித்திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT) அறிமுகம் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகியவை - ஆகஸ்ட் 19 ஞாயிறு அன்று, ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) வளாகத்தில், மறைந்த டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடையில், மாலை 4:45 மணியளவில் நடைபெற்றது.
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா சேக், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் தலைவர் பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.புஹாரி மற்றும் மூத்த மருத்துவர் டாக்டர் முஹம்மது லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் - நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி - இறைமறையில் இருந்து சில வசனங்களை ஓத - நிகழ்ச்சிகள் துவங்கின.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்ந்து, ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன் வரவேற்புரை வழங்கினார்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் திரு வாஜ்பாய் ஆகியோர் நினைவாக ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.
தொடர்ந்து - நிகழ்ச்சி குறித்த விரிவான அறிமுகவுரையை ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி வழங்கினார்.
காயல்பட்டினம் நகருக்கு, கடந்த இரண்டு ஆண்டு காலமாக, மெகா | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் செய்துள்ள மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து மெகா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.என்.அஹமத் சாஹிப் விளக்கினார்.
இது சம்பந்தமாக - அச்சிடப்பட்டிருந்த சிறப்பு புத்தகம் அவ்வேளையில் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டோர்க்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து - நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், MEDICAL COUNCIL OF INDIA (MCI) அமைப்பின் பி.சி.ராய் விருது பெற்றவரும், INDIAN MEDICAL ASSOCIATION (IMA) - TAMIL NADU CHAPTER அமைப்பின் வாழ்நாள் சாதனை விருது பெற்றவருமான டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் அவர்களுக்கு - காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், PRIDE OF KAYALPATTINAM விருதினை வழங்கினார்.
காயல்பட்டினம் மக்களுக்காக பல்வேறு வகைகளில் சேவையாற்றி வரும் மருத்துவர்கள், சேவையாற்றி மறைந்த மருத்துவர்கள் குறித்த குறிப்புகளை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி எடுத்து வழங்கினார்.
அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் மக்களுக்காக மகத்தான மருத்துவ சேவை புரிந்த மருத்துவர்களுக்கு YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES விருதுகளை - டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் மற்றும் டாக்டர் முஹம்மது லெப்பை ஆகியோர் வழங்கினர்.
மெகா | நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் அமைத்துள்ள அவசரகால மருத்துவ உதவித்திட்டத்தினை (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT) - டாக்டர் முஹம்மது லெப்பை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து - சிறப்பு விருந்தினர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரப் உரையாற்றினார்.
தனது உரையில் - விருது பெற்ற மருத்துவர்களை வெகுவாக பாராட்டிய டாக்டர் அஷ்ரப், நகரில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து - விருதுபெற்ற மருத்துவர்கள் ஏற்புரை வழங்கினர். மக்ரிப் தொழுகைக்கு பிறகும் தொடர்ந்த நிகழ்ச்சியில், விருதுபெற்ற மருத்துவர்களின் உரைகள் இடம்பெற்றன.
மாலை அமர்வில், அவசரகால மருத்துவ திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT) குறித்த விரிவான விளக்கம் - பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் - அவசரகால தருணங்களில் - பொது மக்கள் பயன்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் விபரம், பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இறுதியாக, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் செயலர் ஹாஜி எம்.ஏ.புஹாரி நன்றியுரை நவில, தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி - இரவு 8 மணியளவில் நிறைவுற்றது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து - பெண்கள் உட்பட - பொதுமக்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
விருதுபெற்ற மருத்துவர்கள் விபரம், அவசரகால மருத்துவ உதவித்திட்டம் விபரம் ஆகியவை தனிச்செய்தியாக பின்னர் வெளியிடப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 27, 2018; 8:00 pm]
[#NEPR/2018082701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|