மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில், அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில் – ஆகஸ்ட் 19 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், அவசரகால மருத்துவ உதவித் திட்டம் (Medical Emergency Reponse Project) துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA)* ஏற்பாட்டில் *மூத்த மருத்துவர்கள் கவுரவிப்பு நிகழ்ச்சி (YEOMAN AWARDS FOR EXEMPLARY MEDICAL SERVICES)* மற்றும் *அவசரகால மருத்துவ உதவித்திட்டம் (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT* அறிமுகம் நிகழ்ச்சி நிகழ்ச்சி ஆகியவை - *ஆகஸ்ட் 19 ஞாயிறு* அன்று, *ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)* வளாகத்தில், மறைந்த *டாக்டர் எஸ்.ஆனந்தன் நினைவு மேடையில்*, மாலை 4:45 மணியளவில் நடைபெற்றது.
*காயல்பட்டினத்தில் அவசரகால சூழலில் மருத்துவ உதவி பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன* என்ற அச்சம் பொது மக்களிடம் பரவலாக காணப்பட்டதால் - கடந்த *பிப்ரவரி 25* அன்று, *மெகா | நடப்பது என்ன? குழுமம்* ஏற்பாட்டில், காயல்பட்டினம் பூர்விக மருத்துவர்களுடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
*உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் பணியாற்றிவரும் காயல்பட்டினம் பூர்வீக மருத்துவர்களுடன் நடந்த அந்த கலந்துரையாடலில் மூலம் பெறப்பட்ட சில ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டு - அவசரகால மருத்துவ உதவி திட்டத்தினை (MEDICAL EMERGENCY RESPONSE PROJECT) - மெகா | நடப்பது என்ன? குழுமம் வடிவமைத்தது.*
*ஆகஸ்ட் 19* அன்று நடந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தினை _மூத்த மருத்துவர்_ *டாக்டர் முஹம்மது லெப்பை* - முறையாக வெளியிட்டார். அதனை தொடர்ந்து - அந்த திட்டத்தினை, _நிகழ்ச்சி தொகுப்பாளர்_ *ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி*, பொது மக்களிடம் விரிவாக விளக்கினார்.
*மெகா | நடப்பது என்ன? குழுமம்* வடிவமைத்துள்ள திட்டம், பொது மக்கள் எளிதாக நியாபகம் வைத்துக்கொள்ளும் 8 தொலைபேசி எண்களை - அடிப்படையாக கொண்டது. இந்த எண்கள் - அவசரகால சூழல்களில், பொது மக்களை - *ஆட்டோ, மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன், ஆம்புலன்ஸ் மற்றும் மெடிக்கல் ஷாப்* ஆகியவற்றுடன் இணைக்கும்.
_இந்த எண்கள் அடங்கிய - *பாக்கெட் அளவிலான அட்டை, ஸ்டிக்கர், கைப்பைகள்* பொதுமக்களுக்கு - இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன._
_இந்த எண்கள் அடங்கிய *தகவல் பலகைகள் நகரின் முக்கிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.*_
_மேலும் - *ஆகஸ்ட் 24* வெள்ளியன்று, நகரின் அனைத்து ஜும்மா பள்ளிகளிலும், *எண்கள் அடங்கிய அட்டை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.*_
_இது தவிர - *நகரின் பெண்கள் தைக்காக்களிலும், இந்த எண்கள் அடங்கிய கைப்பை பெருநாள் அன்றும், அதனை தொடர்ந்தும் வழங்கப்பட்டது.*_
*இந்த சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?*
(1) திடீரென அவசர மருத்துவத்தேவை எழும்போது, *முதலுதவி அவசியம் எனில், உடனடியாக அந்த முதலுதவியினை - முதலுதவி வழங்க பயிற்சி உள்ளவர்கள் மூலம் காலம் தாழ்த்தாமல் வழங்க மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.*
(2) நகரின் *மூன்று மருத்துவமனைகளில் (அரசு மருத்துவமனை, கே.எம்.டி.மருத்துவமனை, ரசாக் மருத்துவமனை) ஏதாவது ஒன்றுக்கு, நோயாளியை உடனடியாக அழைத்து செல்ல* மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள் - பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
*அரசு மருத்துவமனை - 280 369, கே.எம்.டி.மருத்துவமனை (இரவு நேர சேவை) - 280 465; ரசாக் மருத்துவமனை - +91 962 96 99 123 (இரவு நேர சேவை); +91 94 43 43 42 41 (பிரசவகால சேவை)*
(3) *சொந்த வாகனம் உள்ளவர்கள் - நோயாளிகளை, தங்கள் வாகனத்தில், அழைத்து செல்லலாம்.* அதற்கு வாய்ப்பில்லாதவர்கள், நகரின் ஆட்டோ சேவையை பயன்படுத்தலாம்.
அவசரகால ஆட்டோ தேவைக்காக மூன்று எண்கள் *(285 101, 285 102, 285 103)* அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்களுக்கு பின்னால் உள்ள ஆட்டோக்களை சகோதரர்கள் - *எஸ்.எம்.ஜிப்ரி, அப்துர் ரஹ்மான், சம்சுகனி* - ஆகியோர் இயக்குகிறார்கள்.
(4) நோயாளியை ஆட்டோவில் அழைத்து செல்ல வாய்ப்பு இல்லையென்றால், *285 108 என்ற எண்ணை அழைத்து, ஆம்புலன்ஸ் உதவி கோரலாம்.* இந்த எண்ணுடன் - *தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.), காயல்பட்டினம் கிளையின் ஆம்புலன்ஸ் சேவை இணைக்கப்பட்டுள்ளது.*
இதை தவிர - *தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை - காயல்பட்டினம் அருகாமையில், 8 - 10 கிலோமீட்டர் வட்டத்தில் 3 இடங்களில் உள்ளது.*
(5) *அவசரகால சூழல்களில், நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதையே - மெகா | நடப்பது என்ன? குழுமம் பரிந்துரைக்கிறது.*
சில சூழல்களில் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வாய்ப்பில்லை என்றால், *285 104* என்ற எண்ணை தொடர்புகொண்டு மருத்துவர் உதவிகோரலாம். இந்த எண்ணுடன், *டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்* அவர்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளார்.
இது தவிர -
*285 106* என்ற எண்ணை தொடர்புகொண்டு, *நர்சிங் (செவிலியர்)* உதவி கோரலாம்,
*285 107* என்ற எண்ணை தொடர்புகொண்டு, *வீடுகளுக்கு வந்து ரத்த பரிசோதனை* போன்ற சேவைகளை கோரலாம். இந்த எண்ணுடன் *சகோதரர் ரபீக் (பிஸ்மி லேப்)* இணைக்கப்பட்டுள்ளார்.
*285 109* என்ற எண்ணை தொடர்புகொண்டு, *அவசரகால மருந்துகள் பெற (மெடிக்கல் ஷாப்)* உதவி கோரலாம். இந்த எண்ணுடன் - *மஜாயா மெடிக்கல் ஷாப்* இணைக்கப்பட்டுள்ளது.
*தன்னார்வம் கொண்ட நபர்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மேலே விவரிக்கப்பட்டுள்ள சேவைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனை தொடர்ச்சியாக மெகா | நடப்பது என்ன? குழும நிர்வாகம் கண்காணித்து, குறைப்பாடுகள் காணப்பட்டால், தேவையான மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வர - _இறைவன் நாடினால்_ - திட்டமிட்டுள்ளது.*
இவண்,
நிர்வாகிகள்,
*நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.*
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஆகஸ்ட் 29, 2018; 9:30 am]
[#NEPR/2018082901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|