ஹாங்காங்கில் கடற்கரையில் நடைபெற்ற சிற்றுலா கபடி போட்டியில் காயல் யுனைட்டெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் வியுனைடெட் ஸ்போட்ஸ் கிளப் அணுசரனையில் ஒரு நாள் இன்பச் சிற்றுலா மற்றும் கபடி போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஞாயிற்று கிழமையன்று லன்டாவ் தீவில் உள்ள கீழ் சுங் ஷா கடற்கரையில் நடைபெற்றது.
இப்போட்டியில் சென்னை கிங்ஸ், காயல் யுனைடெட், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்ஸ், ஜெம் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் காயல் யுனைடெட் அணி அதிக புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை கிங்ஸ் அணியினர் இரண்டாம் இடத்தை கைபற்றினர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பையும், வீரர்களுக்கு பதக்கங்களையும் ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக முன்னோடிகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
முன்னதாக இச்சிற்றுலா நிகழ்விடம் சென்று - திரும்பி வர சிம் ஷா சுயி மிடில் ரோடு தபால் நிலையம் அருகிலிருந்து இரண்டு பேருந்தும், துங் சுங் MTR அருகிலிருந்து ஓர் பேருந்தும் இயக்கப்பட்டது. இச்சிற்றுலாவில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட சுமார் 170 நபர்கள் கலந்து கெண்டு தங்களுக்குள் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறியும், கடற்கரையின் இயற்கையை ரசித்தும், கபடி போட்டியை ஆரவாரத்துடன் கண்டு கழித்தும் மகிழ்ந்தனர். வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு , மாலை தேநீர் ஆகியவை பறிமாறப்பட்டது.
இச்சிற்றுலா மற்றும் கபடி போட்டிகளை ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகத்தின் நிறுவாகிகள் U.நூகு, அருன், செந்தில், S.M.K. இஸ்மாயில், M.A.செய்யது அகமது, K.M.செய்யது அகமது, ஹபிபு ரஹ்மான், ரஜினிகாந்த், அனு ரஜினிகாந்த், உபைதுல்லாஹ், K.S.செய்யது இஸ்மாயில், கூஸ் அப்துல் காதர் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கிலிருந்து...
தகவல்:
முத்து இப்றாஹீம்
|