ஆதார் மையங்களில் அதிக கட்டணம் கேட்டால் 1947 என்ற எண்ணில் முறையிட வசதி உள்ளது. இத்தகவலைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் ஆதார் மையம் செயலாற்றி வருகிறது. இம்மையத்தில் சில சேவைகளை பெற - நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆதார் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் UIDAI அமைப்பின் தகவல்படி, கீழ்க்காணும் சேவைகள், அவற்றுடன் வழங்கப்பட்டுள்ள தொகை மட்டுமே வசூல் செய்யப்படும். மேலும் அதற்கான ரசீதும் வழங்கப்படவேண்டும். அதற்கு மேல் வசூல் செய்வது லஞ்சமாக கருதப்படும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையை விட அதிகமாக வசூல் செய்தால், பொதுமக்கள் 1947 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு புகார் பதிவு செய்யலாம்.
(1) புதிதாக ஆதார் எண் பெற - இலவசம் / கட்டணம் கிடையாது
(2) ஏற்கனவே ஆதார் எண் பெறப்பட்ட குழந்தைகளின் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க - இலவசம் / கட்டணம் கிடையாது
(3) உங்கள் ஆதார் எண்ணை தேடி, கருப்பு / வெள்ளை அச்சு (B/W Print) வழங்க - ரூபாய் 10 + 18 சதவீதம் GST (மொத்தம் - ரூபாய் 11.80)
(4) உங்கள் ஆதார் எண்ணை தேடி, வண்ண அச்சு (Colour Print) வழங்க - ரூபாய் 20 + 18 சதவீதம் GST (மொத்தம் - ரூபாய் 23.60)
(5) உங்கள் பெயர், விலாசம், பிறந்ததேதி, மொபைல் எண், பாலினம், ஈமெயில் போன்ற தகவல்களில் மாற்றம் செய்ய - ரூபாய் 25 + 18 சதவீதம் GST (மொத்தம் - ரூபாய் 29.50)
(6) இதர பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க - ரூபாய் 25 + 18 சதவீதம் GST (மொத்தம் - ரூபாய் 29.50)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 2, 2018; 2:00 pm]
[#NEPR/2018090201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |