படிவம் 6ஏ-வைப் பயன்படுத்தி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான விபரங்களை உள்ளடக்கி, பொதுமக்கள் நலன் கருதி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜனவரி 1, 2019 தேதியில் 18 வயது பூர்த்தியடைவோர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை - செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
31.12.2000 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் அல்லது ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறிய காரணத்தால் வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் - படிவம் 6A (FORM 6A பயன்படுத்தப்படவேண்டும்.
http://kayal.org/downloads/form6a.pdf
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயரை சேர்க்க, படிவம் 6 A பயன்படுத்தவேண்டும்.
இந்த படிவத்தில், வழமையான தகவல்களுடன் - விண்ணப்பம் செய்யும் வெளிநாடு வாழ் இந்தியரின் பாஸ்போர்ட் விபரம், விசா விபரம், வெளிநாட்டு முகவரி போன்றவை கோரப்படும்.
மேலும் - விசா விபரம் அடங்கிய பாஸ்போர்ட் பக்கங்களின் நகலும் - நிரப்பப்படும் படிவத்துடன் சமர்ப்பிக்கப்படவேண்டும். இந்த விண்ணப்பத்தை நிரப்பி, எதிர்வரும் செப்டம்பர் 9, செப்டம்பர் 23, அக்டோபர் 7, அக்டோபர் 14 ஆகிய நான்கு நாட்கள்களில் (ஞாயிற்றுக்கிழமைகள்) - அந்தந்த வாக்கு சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் தவறாமல், ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளவும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்திட, ஒப்புதல் ரசீது அவசியம் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 5, 2018; 4:30 pm]
[#NEPR/2018090502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|