படிவம் 7ஐப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்ற பெயரை நீக்குவது தொடர்பான விபரங்களை உள்ளடக்கி, பொதுமக்கள் நலன் கருதி “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜனவரி 1, 2019 தேதியில் 18 வயது பூர்த்தியடைவோர் என்ற அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை - செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
31.12.2000 அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்கள், வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் அல்லது ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறிய காரணத்தால் வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்களை சேர்த்திடவும் - படிவம் 6 (FORM 6) பயன்படுத்தப்படவேண்டும்.
http://kayal.org/downloads/form6.pdf
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயரை சேர்க்க, படிவம் 6 A பயன்படுத்தவேண்டும்.
http://kayal.org/downloads/form6a.pdf
படிவம் 7 மூலம் - வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர், தவறுதலாக இணைக்கப்பட்டிருந்தால் அவரின் பெயரை, தகுந்த காரணங்களை தெரிவித்து, நீக்க விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்பவர் தன் சொந்த பெயரை நீக்கவும் கோரிக்கை வைக்கலாம்; தவறுதலாக ஒருவரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், அந்த பெயரை இணைக்கவும் ஆட்சேபனை செய்யலாம்; மேலும் இறந்தவர் பெயர் போன்ற காரணங்களுக்காகவும் பெயரை நீக்க விண்ணப்பம் செய்யலாம்.
http://kayal.org/downloads/form7.pdf
விண்ணப்பத்தை சமர்ப்பித்தப்பின் தவறாமல், ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளவும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை அறிந்திட, ஒப்புதல் ரசீது அவசியம் ஆகும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 6, 2018; 10:45 am]
[#NEPR/2018090601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|