காயல்பட்டினம் சிவன்கோவில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி என்ற தைக்கா பள்ளி அருகிலுள்ள மின்மாற்றி, குருவித்துறைப் பள்ளி அருகில் – தீவுத்தெருவிலுள்ள மின்கம்பத்தை மாற்றக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஊராட்சி ஒன்றியபள்ளி (தைக்கா தெரு) அருகில் உள்ள மின்மாற்றியில் (TRANSFORMER) அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது எனவும், பள்ளிக்கூட மாணவர்கள் கடந்து செல்லும் இப்பாதையில் அமைந்துள்ள இந்த மின்மாற்றியில் இருந்து அடிக்கடி தீப்பொறி வருகிறது எனவும், இதன் காரணமாக அடிக்கடி, மின்னிணைப்பும் துண்டிக்கப்படுகிறது எனவும், இது சம்பந்தமாக பலமுறை புகார் செய்தும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலை அடுத்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் காயல்பட்டினம் மின்நிலையம் இளநிலை பொறியாளர் ஆகியோரிடம், இன்று மனு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் காயல்பட்டினம் தீவுத்தெரு - குருவித்துறை பள்ளி அருகே உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது எனவும், சிமெண்ட் மின்கம்பத்தின் பல்வேறு இடங்களில், பெரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும், இதனால் எந்நேரமும் இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது எனவும், பெறப்பட்ட தகவல் அடிப்படையில், இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றிட வேண்டி - தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு பொறியாளர், காயல்பட்டினம் மின்நிலையம் இளநிலை பொறியாளர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு இன்று மனு வழங்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 10, 2018; 7:30 pm]
[#NEPR/2018091002]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|