| |
செய்தி எண் (ID #) 20952 | | | வெள்ளி, செப்டம்பர் 28, 2018 | பேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை! த.அ.உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு நகராட்சி பதில்!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 1395 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் பேருந்து நிலைய வாயிலில் காவல்துறை சாவடி (Police Beet) அமைக்க நகராட்சி அனுமதி வழங்கவில்லை என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு நகராட்சி பதிலயளித்துள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயலபட்டினம் பேருந்து நிலைய வாயிலில் கடந்த மார்ச் மாதம் - ஆறுமுகநேரி காவல்நிலையம் சார்பாக - காவல்துறை சாவடி (POLICE BOOTH) ஒன்று நிறுவப்பட்டது.
காவல்நிலையம் இல்லாத ஊர் என பெயர்பெற்ற நகரில் காவல்துறை சாவடி (POLICE BOOTH) நிறுவப்பட்டது குறித்து நகரில் பலரால் - எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நடப்பது என்ன? குழுமம் உட்பட நகரின் பல்வேறு அமைப்புகள் இந்த காவல்துறை சாவடியை அகற்றிட அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்று வரை அந்த காவல்துறை சாவடி அகற்றப்படவில்லை.
இதற்கிடையே - ஒரு இடத்தில் காவல்துறை சாவடி அமைப்பது குறித்த ஏதாவது வழிமுறைகள், அறிவுரைகள், சுற்றறிக்கைகள் உள்ளனவா என சென்னையில் உள்ள தமிழக தலைமை காவல்துறை (DGP) அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக தகவல் கோரப்பட்டது.
அதற்கு பதில் வழங்கியுள்ள தமிழக தலைமை காவல்துறை அலுவலகத்தின் பொது தகவல் அலுவலர், அவ்வாறு எந்த ஆவணமும் இல்லை தெரிவித்துள்ளனர்.
நகராட்சிக்கு பாத்தியப்பட்ட பேருந்து நிலைய வளாக வாயிலில் காவல்துறை சாவடி அமைத்திட - நகராட்சி அனுமதி வழங்கியுள்ளதா என காயல்பட்டினம் நகராட்சியிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் வழங்கியுள்ள, காயல்பட்டினம் நகராட்சியின் பொது தகவல் அலுவலர், அவ்வாறு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 10, 2018; 8:00 am]
[#NEPR/2018091001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|