சொத்து வரி 200 சதவிகித உயர்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து பொதுமக்கள் வழங்குவதற்காக காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்ட மாதிரி கடிதம் ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களிடம் பகிரப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் அதைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி மூலம் வெளியான செப்டம்பர் 10 நாளிதழ் விளம்பரப்படி - நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும்.
30 தினங்களுக்குள், பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யவில்லை என்றால் - புதிய வரி அமலுக்கு வரும். இதன் விளைவாக தற்போது 1000 ரூபாய் சொத்து வரி செலுத்துவோர், 3000 ரூபாய் வரை சொத்து வரி செலுத்தும் சூழல் எழலாம்.
இந்த வரி உயர்வை எதிர்த்து, நடப்பது என்ன? குழுமம் தனது ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது. இந்த வரி உயர்வை ஆதரிக்காத பொது மக்கள், தங்கள் ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாதிரி ஆட்சேபனை கடிதம் - நடப்பது என்ன? குழுமம் வாயிலாக - சமூக ஊடகங்கள் மூலமும், ஜமாஅத்து / ஊர் நல குழுக்கள் மூலமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 14) வெள்ளிக்கிழமை, ஜும்மா தொழுகைக்கு பிறகு - பள்ளிவாசல் வாயில்களில், மாதிரி ஆட்சேபனை கடிதம் - நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் விநியோகம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் - மாதிரி கடிதத்தை ஆர்வமாக பெற்று சென்றார்கள்.
இந்த மாதிரி கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், நகரின் கீழ்க்காணும் நிறுவனங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்:
(1) பதுரியா டீ கடை (கூலக்கடை பஜார்)
(2) யுனைடெட் கார்ட்ஸ் (ஐ.ஓ.பி. வங்கி அருகில்)
(3) ஸ்டார் ரெடிமெட்ஸ் (தபால் நிலையம் எதிரில்)
(4) முஹம்மது டிராவல்ஸ் & ஹஜ் சர்வீசஸ் (பேருந்து நிலையம் எதிரில்)
(5) மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி (அல் ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளி எதிரில்)
(6) அர் ரஹ்மான் சூப்பர் மார்க்கெட் (சதுக்கை தெரு)
(7) M.H.M.ஸ்டோர் (குருவித்துறைப்பள்ளி எதிரில்)
நிரப்பிய கடிதத்தை, பதிவு தபால் மூலமோ, நேரடியாகவோ காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பிட பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 14, 2018; 5:00 pm]
[#NEPR/2018091402]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|