காயல்பட்டினத்தில் சொத்து வரி அதிகரிப்பை எதிர்த்து, அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் / ஊர் நல கமிட்டிகள், வழிபாட்டுத்தல நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனுவை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி மூலம் வெளியான செப்டம்பர் 10 நாளிதழ் விளம்பரப்படி - நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும்.
30 தினங்களுக்குள், பொது மக்கள் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யவில்லை என்றால் - புதிய வரி அமலுக்கு வரும். இதன் விளைவாக தற்போது 1000 ரூபாய் சொத்து வரி செலுத்துவோர், 3000 ரூபாய் வரை சொத்து வரி செலுத்தும் சூழல் எழலாம்.
இந்த வரி உயர்வை எதிர்த்து, நடப்பது என்ன? குழுமம் தனது ஆட்சேபனையை - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது.
சொத்துவரி அதிகரிப்பு முயற்சியை கைவிடக்கோரி நகரின் ஜமாஅத்துகள், புறநகர் / ஊர் நல கமிட்டிகள், வழிபாட்டுத்தல நிர்வாகிகள் கையெழுத்திட்ட மனு, ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களிடம் இன்று நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 11:45 am]
[#NEPR/2018091702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|