காயல்பட்டினத்தில் சொத்து வரியை அதிகரிக்க – நகராட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ரத்து செய்திட ஆணையருக்குப் பரிந்துரைக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமீப காலங்களில், நகரில் வெளியூர்கள் / வெளிமாவட்டம் / வெளிமாநிலத்தில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பெருவாரியானவர்கள் கண்ணியமானவர்கள் என்றாலும், ஒரு சிலரால் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இப்பிரச்சனை காயல்பட்டினம் நகரில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தலைதூக்க துவங்கியுள்ளது.
இது சம்பந்தமாக - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு முரளி ரம்பா IPS - கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில், பிற மாநில குடியேற்ற தொழிலாளர்கள் சட்டம் 1979 (Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979 (Central Act 30 of 1979)) என்ற மத்திய சட்டம், இது சம்பந்தமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள விதிமுறைகள்படி (Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) (Tamil Nadu) Rules, 1983) - இது போன்ற தொழிலாளர்கள் குறித்த பதிவேடுகளை, இவர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் / ஒப்பந்ததாரர்கள் பராமரிக்கவேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் இவ்வறிவிப்பு வரவேற்கதக்கதாக இருந்தாலும், காயல்பட்டினம் போன்ற நகரில் சமீப காலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது - இந்த சட்டத்தின் கீழ் வராத வெளி மாநில நபர்கள் தான்.
இந்த நபர்கள் எந்த நிறுவனங்களிலும் பணியாற்றவில்லை; எந்த ஒப்பந்ததார் கீழும் அவர்கள் இல்லை.
எனவே இது போன்ற வெளிமாநிலத்தவர்கள் விஷயத்தில், காவல்துறை வேறுவிதமாக அணுகவேண்டும்.
(1) சென்னை, புது டில்லி போன்ற நகரங்களில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் குறித்த விபரங்கள் - பிரத்தியேக படிவத்தில் சேகரிக்கப்படுகின்றன. அது போல - காயல்பட்டினத்தில், காவல்துறை துணைக்கொண்டு, இது போன்ற படிவங்களில் - வெளிமாநிலங்களில் இருந்து வாடகை வீடுகளில் தங்குவோர் விபரங்கள் சேகரிக்கப்படவேண்டும்
(2) வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த சட்டத்தின் கீழ் வராத, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் காணப்படும் வெளி மாநிலத்தவர்கள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்கள் பின்னணி அறியப்பட்டு, காவல்துறையில் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடு செய்யவேண்டும்; அது சாத்தியமில்லை என்றால், இது போன்ற நபர்கள், நகரில் வீதி, வீதியாக சென்று வியாபாரம் செய்வதற்கு தடை செய்யவேண்டும்.
இவ்விரு கோரிக்கைகளும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு முரளி ரம்பா IPS அவர்களிடம் இன்று நடப்பது என்ன? குழும நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 17, 2018; 4:00 pm]
[#NEPR/2018091704]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|