ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை 23.11.2018. அன்று நடத்திட, அதன் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, 19.08.2018. அன்று காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட முதலுதவி பயிற்சி முகாம் & மருத்துவக் கையேடு குறித்தும் உறுப்பினகளுக்கு விளக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அபூதபீ காயல் நல மன்றத்தின் 60 ஆவது செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 14-09-2018 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் M.S. முஹம்மது உமர் அவர்களின் தலைமையில் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் மற்றும் பொருளாளர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன்ஆகியோரது இல்லத்தில் வைத்து கூடியது. செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் முத்து அஹ்மது அவர்கள் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கிவைத்தார்.
மன்றத்தின் தீர்மானங்கள்:
1) நம் மன்றம் சார்பாக கடந்த ஆகஸ்ட் 19 தேதி அன்று நடைபெற்ற முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் மருத்துவ கையேடு வெளியீடு நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நிறைவடைய செய்ய உதவிய மன்ற உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் அபூதபீ மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. முகாம் மற்றும் மருத்துவ முதலுதவி கையேடு செலவினங்கள் சரிபார்க்கப்பட்டு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2) மன்றத்தின் இம்மாத ஷிபா மருத்துவ உதவியாக 10 மனுதாரர்களுக்கு Rs 39,000 நிதியும் மன்ற உறுப்பினர்கள் வழங்கிய Rs 21,500 ஒரு மனுதாரருக்கும் ஒதுக்கப்பட்டது.
3) கேரளா வெள்ளம் நிவாரண வகைக்காக சில உறுப்பினர்கள் தந்த Rs. 23,000 தொகையை நடப்பு தேவையறிந்து அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
4) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 23-11-2018 வெள்ளிக்கிழமை அன்று நம் மன்றத்தின் 13-வது பொதுக்குழுவை சிறப்பாக நடத்திட தீர்மானித்து பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இறுதியாக ஆலிம் S.M.B.ஹுஸைன் மக்கீ மஹ்ழரி அவர்கள் துஆ இறைஞ்ச, கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அபூதபீ காயல் நல மன்றம் சார்பாக முதலுதவி விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் மருத்துவ கையேடு வெளியீடு டாக்டர் M.S.அஷ்ரஃப் உட்பட நகர பிரமுகர்கள்,பொதுமக்கள் பங்கேற்பு!
எம் அபூதபீ காயல் நல மன்றம், ஷீபா மருத்துவ அறக்கட்டளை மற்றும் நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை இணைந்து முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து செயல்முறை பயிற்சிகள், மற்றும் முதலுதவி பற்றிய மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சிகள் மன்ற முன்னாள் தலைவரும் எம்மன்ற காயல் பிரதிநிதியுமான ஹபீப் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி முன்னிலையில் ஆகஸ்ட் 19, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 1.30 வரை எல்.கே.மேனிலைப்பள்ளி மிகச்சிறப்பாய் நடைபெற்றது.
முகாம் நிகழ்ச்சிகளை செயற்குழு உறுப்பினரும் முகாம் ஒருங்கிணைப்பாளரின் ஒருவருமான A.S முத்து அஹ்மத் ஆலிம் மஹ்ழரி தொகுத்து வழங்கினார். இளவல் ஹபீப் ரஷாத் கிராத் ஓதி துவக்கி வைத்தார், வரவேற்பு மற்றும் மன்ற பற்றிய அறிமுக உரையை மன்றத்தின் செயலாளரும் முகாம் ஒருங்கிணைப்பாளரின் ஒருவருமான DR. ஹமீத் யாசிர் அவர்களும் முகாம் பற்றிய அறிமுக உரையை DR. செய்யது அஹ்மத் அவர்களும் வழங்கினார்கள்.
மருத்துவ முதலுதவி கையேடு வெளியீடு:
இம்முகாமில் மருத்துவ முதலுதவி கையேடு அபூதபீ மன்ற அங்கத்தினர்கள் ஹபீப் ரஹ்மான் ஆலிம், ஹுசைன் நூருதீன், ஹுவவைலித், ஷீபா மருத்துவ அறக்கட்டளை தலைவர் செய்யது அபூ தாஹிர் மற்றும் செயலாளர் மஸூத் ஆகியோர்கள் வழங்கிட Dr.அஷ்ரஃப், Dr.முஹம்மது லெப்பை Dr.ஜெயந்தன் Dr.ஜெயலட்சுமி (முதன்மை செவிலியர்) TAS அபூபக்கர், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நினைவுப் பரிசு:
பல சிரமங்களுக்கிடையில் எங்கள் மன்றத்தின் அழைப்பினையேற்று எம்மக்களின் சந்தேகங்ளுக்கு பதிலளித்து பயிற்சியும் தந்து இம்முகாமை சிறப்படைந்த செய்த டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை முதலுதவி பயிற்றுவிக்கும் குழுவுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர்களான, DR. செய்யது அஹ்மத், DR. ஹமீத்யாசிர், M.Sமுஹம்மது உமர், பாதுல் அஷ்ஹாப், ஷம்சுதீன் ஆகியோர்கள் இணைந்து அபூதபீ மன்ற சார்பாக நினைவுப்பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
டாக்டர் M.S.அஷ்ரஃப் (முன்னாள் தலைவர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்) உரை:
நமது ஊரில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் வாழ்வாதார சூழ்நிலைகளை உயர்த்த அளப்பெரிய சேவைகளைச் செய்து வரும் உலக காயல் நல மன்றங்களைப்போல் அபூதபீ காயல் மன்றமும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கிச் செயலாற்றி வருவதை புகழ்ந்து பாராட்டி இது போன்ற விழிப்புணர்வு பயிற்சி முகாம் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் இப்பயிற்சியை பாட சாலைகளில் ஒரு பகுதி நேர பாடதிட்டமமாக வழங்கிட ஆவணம் செய்யும் பட்சத்தில் விபத்துக்கள் குறிப்பாக சாலை விபத்துகள் குறைவதற்கு வழிவகுக்கும் என சிறப்பான உரை தந்து அமர்ந்தார்.
நன்றியுரை:
மன்ற பொருளாளர் P.M ஹுசைன் நூருதீன் இம்முகாம் சிறப்பாக நிறைவடைய உதவிய வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி தெரிவித்து,முதலுதவி முகாமில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும், பயிற்சிகள் வழங்கிய டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை முதலுதவி பயிற்றுவிக்கும் குழுவுக்கும்,முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட மன்ற உறுப்பினர்கள்,மருத்துவ கையேடு மற்றும் முகாமிற்கு உறுதுணையாக செயல்பட்ட காயல் நியூஸ் அட்மின் முஜாஹித், பேனர், விளம்பர செய்திகளை நேர்த்தியாக செய்திட உதவிட்ட இஃக்ரா நிர்வாகி தர்வேஷ், (காயல்.காம்) சாலிஹ் அவர்களுக்கும்,அரங்கம் தந்துதவிய எல். கே. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஒளி, ஒலி அமைத்து தந்த ஹேப்பி சவுண்ட் சேவை மற்றும் விருந்தினர்களுக்கு சிற்றுண்டி மதிய உணவு ஏற்பாடு செய்து, உறுதுணையாய் இருந்த மன்ற உறுப்பினர்கள்களுக்கும் அகமகிழ அபூதபீ காயல மன்றம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
விழிப்புணர்வு பயிற்சி முகாம் மற்றும் மருத்துவ கையேடு வெளியீடு அனைத்து நிகழ்வுகளையும் https://photos.app.goo.gl/ZhS4464Ca7gg6Mtb6 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி / ஊடகத்துறை பொறுப்பாளர்) |