சமூக ஊடகக் குழுமங்களில் அங்கம் வகிக்கும் பொதுமக்கள் தகவல்களைப் பகிர்வதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் – அதன் குழுமங்கள் மூலமாகப் பொதுநல அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தகவல்கள் பகிரப்படுகின்றன. இதன் மூலம் - பல்வேறு நன்மைகளும் நிகழ்கிறது.
|| ஒரு பொருள் காணவில்லை
|| ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
|| ஒரு சிறுவர் / சிறுமி காணவில்லை
|| ஒரு சிறுவர் / சிறுமி தனியாக காணப்பட்டுள்ளார்
|| ஒரு முதியவர் காணவில்லை
|| ஒரு முதியவர் தனியாக காணப்பட்டுள்ளார்
இது போல பல்வேறு தகவல்கள் - சமூக ஊடங்கள் வாயிலாக - பகிரப்படுகின்றன.
இது போன்ற தகவல் பரிமாற்றங்களில் சில நேரங்களில் சில சிக்கல்கள் இருந்தாலும், தனி நபரையோ, சம்பந்தப்பட்டவரையோ, குடும்பத்தினரையோ, சார்ந்த சமூகத்தையோ பெரிதும் பாதிப்பதில்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழல்களுக்கு பகிரப்படும் படங்களிலேயே, சம்பந்தப்பட்டவர் பெயர், முகவரி, தொடர்பு எண், சம்பவ தேதி போன்ற தகவல்கள் பதியப்பட்டு இருந்தால் - இதுபோன்ற பதிவுகளில் உள்ள சில அசௌகரியங்கள் / சிக்கல்கள் நீங்கும்.
அதே நேரத்தில் - ஒரு இளம் வயது பெண் குறித்த தகவல்கள் - சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது - குறிப்பாக புகைப்படத்துடன் பகிரப்படும்போது - அதன் விளைவுகள் வேறு விதமானது.
சமூக ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதனை நீண்ட காலமாக கண்டுவருவதன் அடிப்படையில் இது போன்ற பதிவுகள் விஷயத்தில் - பொது மக்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என நடப்பது என்ன? குழுமம் கேட்டுக்கொள்கிறது.
வருங்காலங்களில் - இது போன்ற பதிவுகளை - நடப்பது என்ன? குழுமத்தில் பதியவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மூலம் பதியப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும்.
மேலும் காயல்பட்டினம் மட்டுமல்லாது - பிற ஊர்கள் சார்ந்த பதிவுகளுக்கும் பொருந்தும்.
சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலம் நன்மை விளையும் என எண்ணுவோர், குழும நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு - விபரங்களை தெரிவிக்கலாம்.
குழும நிர்வாகிகள் - இதுகுறித்து தீர விசாரித்து - சமூக ஊடகங்களில் பகிர்வதனால் - பிரயோஜனம் உள்ளது என முடிவு செய்தால் மட்டும், அது போன்ற தகவல்கள் - நிர்வாகிகள் மூலமே, இக்குழுமத்தில் பதிவு செய்யப்படும்.
எனவே - இது போன்ற விஷயங்களில், மேலே கூறப்பட்ட விளக்கங்களை மனதில் கொண்டு, அனைவரும் ஒத்துழைக்கும்படி குழும அங்கத்தினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 22, 2018; 6:30 pm]
[#NEPR/2018092202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|