வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் குறித்து காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) & அதன் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகர் முழுக்க ஆட்டோ வாகனம் மூலம் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
1-1-2019 தேதியில் 18 வயது பூர்த்தியாகியிருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா தேர்தல் ஆணையம், புதிய வரைவு வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 1 அன்று வெளியிட்டுள்ளது.
மேலும் - அக்டோபர் 31 வரை - வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் மற்றும் நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் - இப்பணிகளை பொதுமக்களுக்கு எளிதாக்கிடும் நோக்கில், செப்டம்பர் 9, செப்டம்பர் 23, அக்டோபர் 7, அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் - சிறப்பு முகாம்கள் நடத்திடவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த அடிப்படையில், இந்த வரிசையின் முதல் சிறப்பு முகாம் செப்டம்பர் 9 அன்று நடைபெற்றது.
இவ்வரிசையில் இரண்டாவது சிறப்பு முகாம், நாளை (செப்டம்பர் 23; ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு முகாம்கள், நகரில் - உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் அனைத்து இடங்களிலும் (பொதுவாக பள்ளிக்கூடங்கள்) நடைபெறும்.
பொது மக்கள், தாங்கள் பொதுவாக வாக்களிக்க செல்லும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று சேர்த்தல், திருத்தல், நீக்கல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
முக்கியம்: பெயரை சேர்க்கவோ, திருத்தவோ, நீக்கவோ விண்ணப்பம் கொடுக்கும் பொது மக்கள் - தவறாது ஒப்புதல் ரசீதினை கேட்டு பெற்றுவரவும். ஜனவரி முதல் வாரம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அவ்வேளையிலும் - தாங்கள் கேட்டது போல் - பெயர் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ படவில்லையெனில் - சட்டப்படி முறையீடு செய்ய ஒப்புதல் ரசீது அவசியம்.
இந்த முகாம்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் - கடந்த சில தினங்களாக, நடப்பது என்ன? குழுமம் - சமூக ஊடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நகர் முழுவதும் - இன்று - ஆட்டோ ரிக்சா மூலம், விழிப்புணர்வு பிரச்சாரம், நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில் – செய்யப்பட்டு வருகிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: செப்டம்பர் 22, 2018; 4:30 pm]
[#NEPR/2018092201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|