காயல்பட்டினத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் முதல் இதமழை பெய்து வருகிறது. செப்டம்பர் 29, அக்டோபர் 01, 02 ஆகிய நாட்களில் நள்ளிரவில் சுமார் 30 நிமிட அளவுக்கு இதமழை பெய்தது. இடைப்பட்ட நாட்களில் வெயில் ஒளிர்ந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
29.09.2018. அன்று...
01.10.2018. அன்று...
02.10.2018. அன்று...
இன்று...
இந்நிலையில், இன்று (03.10.2018.) 08.45 மணி துவங்கி, 12.45 மணி வரை நகரில் இதமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து சாரல் – தூறல் என மாறி மாறிப் பொழிந்தது. இன்று பெய்த மழை காரணமாக நகரில் மழைக்கால வானிலையை முழுமையாக உணர முடிந்துள்ளது.
தொடர் மழை காரணமாக, நகரில் வழமை போல தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
படங்களில் உதவி:
K.M.T.சுலைமான் & ஹாஃபிழ் M.A.C.முஜாஹித்
|