தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு வங்கிகளில் குருதிக்கொடை முகாம்கள் நடத்தப்படுவதாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தகவலறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
தன்னார்வ குருதிக்கொடையை ஊக்குவிக்கும் நோக்கிலும், தடங்கலின்றி தொடர்ச்சியாக ரத்தம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கிலும், NATIONAL HEALTH MISSION அமைப்பின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும், செப்டம்பர் 2018 - ஆகஸ்ட் 2019 வரையிலான உத்தேச குருதிக்கொடை முகாம்கள் கால அட்டவணையை - இவ்வாரம் - வெளியிட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை - ஆகிய மூன்று இடங்களில் ரத்த வங்கிகள் உள்ளன. இந்த ரத்த வங்கிகள் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள - குருதிக்கொடை முகாம் உத்தேச தேதிகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
அதில் - அடுத்த 12 மாதங்களில், தூத்துக்குடி அரசு ரத்த வங்கி, 70 முகாம்கள் நடத்திடவும், கோவில்பட்டி அரசு ரத்த வங்கி, 33 முகாம்கள் நடத்திடவும், திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி, 11 முகாம்கள் நடத்திடவும் திட்டமிட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் மெகா | நடப்பது என்ன? குழுமத்துடன், தூத்துக்குடி அரசு ரத்த வங்கி - இரு முகாம்கள் நடத்திடவும், திருச்செந்தூர் அரசு ரத்த வங்கி - இரு முகாம்கள் நடத்திடவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள - முகாம்கள் அட்டவணை:-
http://www.kayal.org/downloads/thoothukudi-blood-donation-camps-tentative-schedule.pdf
குறிப்பு: இந்த கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காயல்பட்டினம் நகருக்கான முகாம் தேதிகள் உத்தேசமானவை; உறுதியான தேதிகள், இறைவன் நாடினால், முகாம்களுக்கு முன்னர், மெகா | நடப்பது என்ன? குழுமம் மூலம் அறிவிக்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 5, 2018; 8:30 am]
[#NEPR/2018100501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|