காயல்பட்டினம் நகராட்சியில், இதுநாள் வரை இருந்த ஆணையர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி ஆணையராக கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்ற திரு பிரேம் ஆனந்த் - அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு மாற்றல் செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் நடைபெறும் தாமிரபரணி புஸ்கார் திருவிழா முன்னிட்டு, அம்பாசமுத்திரத்திற்கு - திரு பிரேம் ஆனந்த் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிகிறது.
புதிய ஆணையர் நியமனம் செய்யப்படும் வரை - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் IAS, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொறுப்பை கவனிப்பார் என நகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 6, 2018; 11:00 am]
[#NEPR/2018100602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|