| 
 
 காயல்பட்டினம் மகுதூம் ஜுமுஆ பள்ளி, ஜாவியா, கே.எம்.டீ. மருத்துவமனை ஆகியவற்றின் நிர்வாகி – அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ், நேற்று (12.10.2018. வெள்ளிக்கிழமை) 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83. அன்னார்,
  
மர்ஹூம் செ.யி.முத்து முஹம்மத் அவர்களின் மகனும்,
  
மர்ஹூம் ஹாஃபிழ் நூ.கு.முஹம்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்களது மருமகனாரும்,
  
மர்ஹூம் ஹாஃபிழ் எம்.எம்.செய்யித் முஹம்மத், எம்.எம்.முஹம்மத் ஜுபைர், முஹம்மத் சுலைமான் ஆகியோரது சகோதரரும்,
  
ஹாஃபிழ் எம்.ஏ.நூஹ் என்ற நூஹ் ஹாஃபிஸா உடைய சகோதரியின் கணவரும்,
  
எம்.என்.செய்யித் முஹம்மத், ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அப்துல் காதிர் ஃபாஸீ ஆகியோரது தந்தையும்,
  
எம்.எஸ்.முஹம்மத் ஸஈத் என்பவரது மாமனாரும்,
  
ஹாஃபிழ் எம்.எஸ்.மிஸ்கீன்  ஸாஹிப் ஃபைஸல், ஹாஃபிழ் எஸ்.எம்.நூஹ்  ரியாஸ் ஆகியோரது பாட்டனாருமாவார்.
  
அன்னாரின் ஜனாஸா, இன்று 10.00 மணிக்கு, காயல்பட்டினம்  மகுதூம் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
  
தகவல்:  
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
  |