எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்று, மாநில ஆளுநரிடம் விருது பெற்றுள்ளார். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
M.A Political Science இல் தமிழ்நாடு பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடம்பெற்று தமிழக ஆளுனிடம் விருது பெற்ற நமதூர் சகோதரர் அஹமது ஸாஹிபு பற்றி சில குறிப்புகள்.....
பிறப்பு :-
சகோதரர் M.N. அஹமது ஸாஹிபு அவர்கள் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி M.I மூஸா நெய்னா, மர்ஹூமா ஹாஜ்ஜா A.S சித்தி குரைஷியா ஆகியோருக்கு மகனாக கடந்த 1980-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. திருமணமாகி தற்போது ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் இவருக்கு உள்ளன.
கல்வித் தகுதி :-
தனது தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் கற்றார்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் BSc Computer Science
இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
பிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி முதுகலை Master Of Computer Appilcation (MCA) படிப்பில் சேர்ந்தார். மும்பையிலுள்ள St.Boston’s Intitution, NIIT போன்ற நிறுவனங்களில் உயர் கணிப்பொறியியல் கல்வி பெற்றார்.
Bachelor of Law இளங்கலை சட்டப்படிப்பை ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் (Andhra University), Master of Arts (M.A) in Political Science பட்டயத்தை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் முடித்துள்ளார்.
தொழில் :-
கடந்த 2001 ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரை சவுதி அரபியா நாட்டின் கணினித்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணியாற்றினார். தற்போது ஸஃபா பில்டர்ஸ் (SAFA Builders) எனும் பெயரில் கட்டுமான நிறுவனத்தை நமதூர் காயல்பட்டினத்தில் தொடங்கி நடத்தி வருகிறார்.
பங்கு வகிக்கும் சமூகப் பொறுப்புகள் :-
சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள், காயல்பட்டினம் Mass Empowerment and Guidance Association - MEGA அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அதன் கீழ் இயங்கி வரும் நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமத்தின் அட்மின்களுள் ஒருவரும் ஆவார்.
காயல்பட்டினம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust - KWT) அமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.
நமதூர் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித், தாயிம்பள்ளி உள்ளிட்ட பள்ளி வாயில்களின் செயற்குழுவிலும், மஸ்ஜித் அத்தவ்பா காயிதே மில்லத் நகர் நல அறக்கட்டளையின் (QaideMillathNagar welfare Trust - QWT) கவுர ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.
இந்திய ஹிஜ்ரி கமிட்டியின் 'ஸூரா கவுன்ஸில்' உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். சவுதி அரேபியாவிலுள்ள (King Abdul Azeez City of Science and Technology - KACST) விண்ணியல் அறிஞர்களோடும், தலைநகர் டெல்லியிலுள்ள (Institute of Objective Studies - IOS) அறிஞர்களோடும் கலந்துரையாடல்களில் பங்கு பெற்று, இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் குறித்த ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒற்றமை www.ottrumai.net இணையதளத்தின் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், குர்ஆன் தேடல் மென்பொருளை தமிழில் முதலில் வடிவமைத்தார். மேற்படி இணையதளத்தில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், இணையவழிப் புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|