காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் - ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா, 14.10.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 16.30 மணியளவில் நடைபெற்றது.
குருவித்துறைப் பள்ளி ஜமாஅத் பிரமுகர்களான சொளுக்கு முத்து ஹாஜி, சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப், எம்.ஏ.அஹ்மத் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சொளுக்கு ஏ.ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா மாணவர் எச்.எம்.ஷேக் அப்துல் காதிர் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய குருவித்துறைப் பள்ளி செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் தலைமையுரையாற்றினார். இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
முன்னணியின் மூத்த விளையாட்டு வீரர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, எஸ்.கே.செய்யித் இப்றாஹீம் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், அதன் அபிமானிகளான எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், புகாரீ சுலைமான், என்.டீ.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ ஆகியோர் மட்டையால் பந்தை அடித்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டைத் துவக்கி வைத்தனர்.
முன்னணியின் பூப்பந்து விளையாட்டு வீரர் மவ்லவீ சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்களும், குருவித்துறைப் பள்ளி ஜமாஅத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்த டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும், சென்னை தி-நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் எஸ்.அக்பர்ஷா அனுசரணையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
ஃபாஸில் ஸ்டூடியோ
|