காயல்பட்டினம் வரலாற்றை ஆதார ஆவணங்களுடன் ஆவணப்படமாக்கும் செயல்திட்டம் – மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு - மெகா & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகிய அமைப்புகளால் செய்யப்படவுள்ளன. ஆவணப்படத்திற்கான ஒளிப்பதிவுப் பணிகள் இம்மாத இறுதியில் துவக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஆலோசனைகள் & நிதி நன்கொடைகளை வரவேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பல நூற்றாண்டு வரலாறு கொண்டது காயல் மண்ணாகும். இம்மண்ணிற்கும், கேரளா, இலங்கை, மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளுக்கும் பல்வேறு தொடர்புகள் - சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதற்கான பல சான்றுகள் உள்ளன.
இந்த நீண்ட, நெடிய, சிறப்புமிக்க வரலாறு முறையாக, முழுமையாக ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது காயல்பட்டினம் மக்களின் விருப்பமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
அதனை கருத்தில் கொண்டு - எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு அமைப்புடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள, கீழ்க்காணும் கோரிக்கைகள், அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் நோக்கில், திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ சத்தியவள்ளியிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பாக, ஆகஸ்ட் 28 அன்று வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
(1) காயல்பட்டினம் பகுதியின் - குறிப்பாக கடலோரப்பகுதியின் - எந்த இடங்கள் விரிவான வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்பதனை கண்டறிய அரசு தொடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்
(2) ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ள பழம் பொருட்களை கரிம கால மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட அரசு ஆவன செய்யவேண்டும்.
(3) சமீபத்தில் பழம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட காயல்பட்டினம் வடக்கு கடற்கரை யின் கோஸ்மரை பகுதியில் - அப்பகுதியின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க அரசு ஆவன செய்யவேண்டும்
(4) இந்நகரின் நீண்ட, சிறப்புமிக்க வரலாற்றினை பறைசாற்றும் விதமாக - காயல்பட்டினத்தின் வடக்கு கடற்கரை பகுதியில் நினைவுச்சின்னம் நிறுவிட அரசு ஆவன செய்யவேண்டும்.
இத்திட்டத்தின் மற்றொரு அம்சமாக, காயல் வரலாறு குறித்து விரிவாக எழுதியுள்ள ஆளுமைகள் உடனான நேர்காணல்கள், சான்றுகள் அடங்கிய ஊக்க ஆவணப்படம் தயாரிக்கும் பணி - முன்னோடி ஆவணப்பட இயக்குனரின் ஒருங்கிணைப்பில் - இம்மாதம் இறுதியில் கேரளா மாநிலம் கோழிக்கோடு நகரில் - இறைவன் நாடினால் - துவங்கவுள்ளது.
காயல் வரலாறு ஆவணப்படுத்தப்படும் திட்டம் குறித்து ஏதேனும் ஆலோசனைகள், தகவல்கள் இருப்பின் - கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
kayalhistory@gmail.com
பல்வேறு அம்சங்கள், பணிகள் நிறைந்த இந்த திட்டத்திற்கு நிதி பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது.
நிதி பங்களிப்பு வழங்க விரும்புபவர்கள்,
MASS EMPOWERMENT AND GUIDANCE ASSOCIATION என்ற பெயரில் காசோலையோ (CHEQUE), வரைவு காசோலையோ (DEMAND DRAFT) வழங்கலாம். [PAYABLE IN KAYALPATTINAM]
அல்லது -
http://mega.ketto.org என்ற இணையதள முகவரி மூலம், நிதி பங்களிப்பு வழங்கலாம். இணையவழியாக, நிதி பங்களிப்பு வழங்கும்போது - தவறாது "வரலாறு திட்டம்" என மறவாமல் குறிப்பிடவும்.
கூடுதல் விபரங்கள் விரும்புவோர் - சகோதரர் சாளை பஷீர் அவர்களை கீழ்க்காணும் எண்ணில் தொடர்புக்கொள்ளவும்.
+91 99628 41761
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 18, 2018; 12:00 pm]
[#NEPR/2018101801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|