காயல்பட்டினம் வழியிலான மாநில நெடுஞ்சாலை ஒப்பந்தப் புள்ளிகள் அக்டோபர் 10ஆம் நாளன்று திறக்கப்படவுள்ளன. இதுகுறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுநல அறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை, பல்வேறு இடங்களில் - பல மாதங்களாக பழுதடைந்த நிலையில், பொது மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் - கடுமையான சிரமங்களை கொடுத்தும் வருகிறது.
இது குறித்து - சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளை பலமுறை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், சந்தித்து வலியுறுத்தியதை அடுத்து - இவ்வாண்டிற்கான CRIDP திட்டத்தில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலை பகுதியும் இணைக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. பார்க்கவும் இணைக்கப்பட்டுள்ள கடிதம்.
அதன் தொடர்ச்சியாக - ஆகஸ்ட் 27 அன்று, நெடுஞ்சாலைத்துறை மூலமாக - காயல்பட்டினம் உள்ளடக்கிய பகுதிகள் உட்பட பல்வேறு சாலைகளை புனரமைக்க, 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.
அக்டோபர் 5 வரை ஆவணங்களை பதிவிறக்கலாம் என அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 10 ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டன.
திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், இது குறித்து அனைத்து பணிகளும் நிறைவுற்று, சுமார் ஒரு மாதத்தில் - பணிகள் துவங்கும் என திருச்செந்தூர் உட்கோட்டபொறியாளர் திரு செந்தில்குமார், நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 20, 2018; 5:30 pm]
[#NEPR/2018102001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|