காயல்பட்டினம் அருணாச்சலபுரம் முதல் கடையக்குடி வரை புதிய சாலை அமைப்பதற்கு, ஒரு கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
TURIP 2018 - 2019 திட்டத்தின் கீழ், அருணாச்சலபுரம் முதல் கடையக்குடி வரையிலான சாலையை ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில்
புனரமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
அக்டோபர் 4 அன்று முன்னாள் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் கையெழுத்திட்டு, அக்டோபர் 13 அன்று இது குறித்த விபரங்கள், தமிழக அரசின் eTENDER இணையதளத்தில் (https://tntenders.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணம்:-
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 17, 2018; 10:00 am]
[#NEPR/2018101701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|