காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் – இன்று 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95. அன்னார்,
மர்ஹூம் அல்லாமா நஹ்வி இஸ்ஹாக் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அ.க.ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் எஸ்.இ.எம்.நூஹ் லெப்பை, ஹாபிஃழ் எஸ்.இ.அஹ்மத், எஸ்.ஏ.சி. செய்யித் முஹம்மத் ஆகியோரது சகோதரியின் கணவரும்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாயில், இலங்கை – கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஆலிம் ஃபாஸி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கி ஆகியோரின் சகோதரரும்,
நஹ்வீ எஸ்.எம்.பி. முஹம்மத் அபூபக்கர், மர்ஹூம் ஹாபிஃழ் நஹ்வீ எஸ்.எம்.பி. செய்யித் ஹாமித் ஸிராஜீ, நஹ்வீ எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் தந்தையும்,
எம்.என்.எல். நூருல் இலாஹ் என்ற முத்து நூர், மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.என்.எல்.அமீருத்தீன் உமரீ ஆகியோரின் மாமனாரும்,
என்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஏ.ஹஃபீழுர் ரஹ்மான், ஜெ.மஹ்மூத் புகாரீ, எம்.ஏ.அப்துல் முன்இம் ஆகியோரின் பாட்டனாரும்,
எம்.என்.எல். ஷெய்கு அப்துல் காதிர், எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை, எம்.என்.எல்.ஆஷிக், எம்.என்.எல்.சுலைமான், எம்.என்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 20:30 மணிக்கு, குருவித்துறை பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
நஹ்வீ S.S.யஃகூத் & M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 12:40 / 27.10.2018.]
|