காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் – இன்று 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 95.
அவரது சேவைகளை நினைவுகூரும் வகையில், அந்நிர்வாகங்களின் சார்பில் குருவித்துறைப் பள்ளி வளாகத்தில் 28.10.2018. ஞாயிற்றுக்கிழமையன்று 20.30 மணிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
பள்ளியின் துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் தலைமை தாங்கினார். பள்ளியின் இணைச் செயலர் எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், ஜமாஅத் பிரமுகர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் எச்.கே.எம்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் – மறைந்த தலைவரின் சேவைகளையும், அவரது இறையச்ச வாழ்வையும் நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ நன்றி கூற, சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ உடைய துஆ பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. முன்னதாக, மறைந்த தலைவரின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி, ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், குருவித்துறைப் பள்ளி மஹல்லா ஜமாஅத்தினரும், நகரின் இதர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
|