Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:44:28 AM
செவ்வாய் | 3 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1951, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:00
மறைவு17:57மறைவு19:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0305:2905:55
உச்சி
12:07
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4519:11
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21050
#KOTW21050
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 30, 2018
புறவழிச்சாலை நடுப்பகுதியில் தெருவிளக்குகள் புதிதாக நிறுவப்பட்டன! அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” குழுமம் நன்றி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2234 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் புறவழிச்சாலையின் நடுப்பகுதியில் புதிதாக தெரு விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்காக, துறைசார் அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை - செக் போஸ்ட் அருகில் இருந்து, தைக்கா தெரு.முனையில் உள்ள உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரை இணைக்கும் சாலை MAJOR DISTRICT ROAD (MDR) சாலையாகும்.

பை பாஸ் சாலை என அழைக்கப்படும் இந்த சாலையை, திருநெல்வேலி - தூத்துக்குடி செல்ல பொது மக்கள், அனுதினமும் பயன்படுத்துகிறார்கள். சுமார் 4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில், தெரு விளக்குகள் முழுமையாக இல்லை.

குறிப்பாக, இந்த சாலையின் மத்தியில், நகராட்சியினால் நிறுவப்பட்ட குடிநீர் அளவுமணி அறைக்கு அருகே உள்ள கோவில் பகுதியில் இருந்து சுமார் 10 கம்பங்கள், தெரு விளக்குகள் இல்லாமல் உள்ளன. இதன் காரணமாக, அடிக்கடி இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.

இப்பகுதியில் வாழும் பொது மக்களின், நலன் - பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், இச்சாலையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணியர் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டும், தெரு விளக்குகள் நிறுவிட கோரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதம் - அப்போதைய புதிய ஆணையர் திரு பிரேம் ஆனந்த் இடம் இதுகுறித்து நினைவூட்டல் செய்யப்பட்டதை அடுத்து, அப்பகுதியில், சில மின்விளக்குகள் நிறுவப்பட்டன. இருப்பினும் - தேவையான அளவில் நிறுவப்படவில்லை. இதற்கு பல்வேறு மழுப்பல் காரணங்கள், பொறியியல் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு வந்தது.

காயல்பட்டினம் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக தற்போது பணியாற்றிவரும் டாக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் IAS அவர்களை நேற்று சந்தித்த நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், இது குறித்து எடுத்துரைத்தனர்.

விபரங்களை கேட்டறிந்த ஆணையர், நகராட்சி பொறியாளர் (பொறுப்பு) திரு சுரேஷ் அவர்களை உடனடியாக அழைத்து, மேலும் காலம்தாழ்த்தாமல் தெரு விளக்குகளை, பை பாஸ் சாலையில் நிறுவிட உத்தரவிட்டிருந்தார்.

இன்று - பைபாஸ் சாலை மத்தியில் புதிய தெரு விளக்குகள் நிறுவும் பணியினை, நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். புதிதாக நிறுவப்பட்ட தெரு விளக்குகள் தற்போது எரிய துவங்கியுள்ளன. எல்லாப்புகழும் இறைவனுக்கே!



துரித நடவடிக்கை எடுத்த காயல்பட்டினம் நகராட்சி பொறுப்பு ஆணையர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் IAS மற்றும் காயல்பட்டினம் நகராட்சி பொறியியல் துறை அதிகாரிகளுக்கு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: அக்டோபர் 25, 2018; 6:30 pm]
[#NEPR/2018102502]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved