டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு செய்து வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு 30.10.2018. செவ்வாய்க்கிழமையன்று, நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் பி.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார்.
|