காயல்பட்டினத்தில் நேற்று முழுக்க சாரலும், சிறுமழையும் பெய்தது. 10.45 மணியளவில் திடீரென இதமழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் இம்மழை நீடித்தது.
இன்று 05:15 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. இதன் காரணமாக, பெரும்பாலும் நகரின் அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 08:20 மணி நிலவரப் படி, நகரில் தொடர்ந்து சிறுமழை பெய்து வருகிறது. குளிர்ந்த வானிலை நிலவுகிறது. கருமேகம் சூழ்ந்துள்ளது. மீண்டும் தொடர்மழை பெய்வதற்கான அறிகுறி தென்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று வெளியிடப்பட்ட மழை பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே 4ஆவது அதிகபட்சமாக, காயல்பட்டினத்தில் – 78.4 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
கனமழையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் – மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று விடுமுறை அறிவித்துள்ளார்.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையாக, நகரின் பல்வேறு சாலைகளில் நேற்று கொசு ஒழிப்புப் புகை அடிக்கப்பட்டது.
|