காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவில் பழுதடைந்துள்ள மின் கம்பத்தை விரைவாக மாற்றிட – “மெகா | நடப்பது என்ன?” சார்பில் மின் வாரியத்திடம் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
மரைக்கார் பள்ளி தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாக, அப்பகுதி மக்கள் மூலம் - புகைப்படத்துடன் - தகவல் பெறப்பட்டது.
அதனை தொடர்ந்து - மழைக்காலம் துவங்கவுள்ளதை கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றிட ஆவனம் செய்யும்படி வேண்டி, தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் (SE) மற்றும் காயல்பட்டினம் மின்வாரிய இளநிலை பொறியாளர் (JE) ஆகியோருக்கு - மெகா | நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.
இதே மனு, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 3, 2018; 9:30 am]
[#NEPR/2018110301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|