அரசுக்கு நாம் வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பொதுமக்களுக்குச் சொன்ன அறிவுரைத் தகவல்களையும், காயல்பட்டினம் நகராட்சி பல வழிகளில் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை விளக்கியும் - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
அரசியல் சாசனப்படி - மூன்று அடுக்கு நிர்வாகம் முறை (3 TIER GOVERNMENT), இந்தியாவில் உள்ளது. அவை - மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், உள்ளாட்சி அமைப்புகள்.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அதிகம் தாக்கம் ஏற்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள்தான்.
உள்ளாட்சி அமைப்புகளே, சாலை வசதி, குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் - தங்கள் பணிகளை மேற்கொள்ள - பல வழிகளில், வருவாய் பெறுகின்றன.
எந்தெந்த வழி என பார்ப்பதற்கு முன்பு, இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு என காண்போம்.
2013 - 2014: ரூபாய் 6,00,37,166
2014 - 2015: ரூபாய் 6,33,92,980
2015 - 2016: ரூபாய் 9,49,95,641
2016 - 2017: ரூபாய் 8,84,41,069
மேலுள்ள புள்ளிவிபரம் - அரசாங்க தணிக்கைத் துறை ஆவணங்களில் பெறப்பட்டவை.
இந்த வருவாயினை - கீழ்க்காணும் 8 தலைப்புகளுக்குள், தணிக்கைத்துறை கொண்டு வருகிறது.
(A) PROPERTY TAX (சொத்து வரி)
(B) OTHER TAXES (இதர வரிகள்)
(C) ASSIGNED REVENUE (ஒதுக்கப்பட்ட வருவாய்)
(D) DEVOLUTION FUND (பகிர்வு வருவாய்)
(E) SERVICE CHARGES AND FEES (சேவைக்கட்டணங்கள்)
(F) GRANTS AND CONTRIBUTIONS (மானியங்கள்)
(G) SALES AND HIRE CHARGES (விற்பனை / வாடகைக்கு வழங்கல் கட்டணம்)
(H) OTHER INCOME (இதர வருவாய்)
இந்த தலைப்புகளுக்கு கீழ், எந்தெந்த உட்பிரிவுகள் மூலம், 2016 - 2017 ஆம் ஆண்டு, (கடைசியாக தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு) - காயல்பட்டினம் நகராட்சி, வருவாய் ஈட்டியது என்பதை காண்போம்.
(A) PROPERTY TAX (சொத்து வரி) (மொத்தம் - 72,09,752)
இந்த தலைப்பு கீழ் - சொத்து வரி மற்றும் காலிமனை வரி வசூல்
-- சொத்து வரி (Property Tax) = 67,56,327
-- காலிமனை வரி (Vacant Land Tax) = 4,53,425
(B) OTHER TAXES (இதர வரிகள்) (மொத்தம் - 34,12,850)
இந்த தலைப்பு கீழ் - நகரில் தொழில் புரிவோரிடம் இருந்து, அவர்களின் வருவாய்க்கு ஏற்ப தொழில் வரி வசூல்
-- தொழில் வரி (Professional Tax) = 34,12,850
(C) ASSIGNED REVENUE (ஒதுக்கப்பட்ட வருவாய்) (மொத்தம் - 9,44,896)
இந்த தலைப்பு கீழ் - நகராட்சி பகுதியில் நடைபெறும் பத்திரப்பதிவுகளுக்கான கட்டணத்தில், உள்ளாட்சி மன்ற பங்கு பெறப்படுகிறது
-- பத்திரப்பதிவு கட்டணம்; உள்ளாட்சி பங்கு (Duty - transfer of property) = 9,44,896
(D) DEVOLUTION FUND (பகிர்வு வருவாய்) (மொத்தம் - 3,55,19,340)
இந்த தலைப்பு கீழ் - மத்திய (CFC), மாநில (SFC) அரசாங்கங்கள், தாங்கள் வசூல் செய்யும் வரிகளில் ஒரு பங்கை - உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்கின்றன
-- பகிர்வு வருவாய் (Devolution Fund) = 3,55,19,340
(E) SERVICE CHARGES AND FEES (சேவைக்கட்டணங்கள்) (மொத்தம் - 71,56,741)
இந்த தலைப்பு கீழ் நகராட்சியின் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் பெறப்படுகிறது
-- தொழில் உரிமம் கட்டணம் (Trade licence fees) = 1,34,252
-- கட்டுமான உரிமம் கட்டணம் (Building licence fees) = 1,74,886
-- பார்க்கிங் கட்டணம் (Parking fees) = 6,000
-- மின்கம்பங்களில் விளம்பரம் (Fees for advertising on lamp posts) = 9,560
-- பேருந்து நிலையம் பேருந்துகள் நுழைவு கட்டணம் (Fees for bays in bus stand) = 1,12,005
-- மீன்பிடி உரிமம் (Fees for fishery rights) = 2,310
-- இதர கட்டணங்கள் (Other fees) = 1,150
-- நகல் விண்ணப்பம் கட்டணம் (Copy application fees) = 37,917
-- புது குடிநீர் இணைப்புக்கான ஆரம்ப தொகை (Initial amount for new water connection) = 9,07,201
-- புது குடிநீர் இணைப்பு வழங்குவதன் மூலம் வருவாய் (Income from giving new water connection) = 3,300
-- குடிநீர் வழங்கல் கட்டணம் (Metered / Tap rate charges) = 57,47,700
-- லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்ய கட்டணம் (Charges for water supply through lorries) = 30,460
(F) GRANTS AND CONTRIBUTIONS (மானியங்கள்) (மொத்தம் - 2,02,78,317)
இந்த தலைப்பு கீழ் மானியங்கள் பெறப்படுகிறது
-- திட்டங்கள் நிறைவேற்ற வழங்கப்படும் மானியங்கள் (Grants for schemes implementation) = 2,02,78,317
(G) SALES AND HIRE CHARGES (விற்பனை / வாடகைக்கு வழங்கல் கட்டணம்) (மொத்தம் - 0)
இந்த தலைப்பு கீழ் விற்பனை / வாடகைக்கு வழங்கல் கட்டணம் பெறப்படுகிறது
-- விற்பனை / வாடகைக்கு வழங்கல் கட்டணம் = 0
(H) OTHER INCOME (இதர வருவாய்) (மொத்தம் - 1,39,19,173)
இந்த தலைப்புக்கு கீழ் - மேலுள்ள தலைப்புகளுக்குள் அடங்காத இனங்கள் மூலமான வருவாய்கள் பெறப்படுகின்றன
-- தினசரி சந்தை - ஆண்டு குத்தகை (Market fees - daily (annual lease)) = 1,66,006
-- ஆடு, மாடு அறுப்பு தொட்டி (Slaughter house fees) = 2,26,746
-- வளர்ச்சி கட்டணங்கள் (Development charges) = 3403
-- நிலங்கள் குத்தகை வாடகை (Rent on lease of lands) = 15,592
-- கடைகள் வாடகை (Rent on shopping complex) = 3,33,144
-- தோண்டப்பட்ட சாலையை புனரமைக்க கட்டணம் (Road cut restoration charges) = 3,04,654
-- அனுமதியில்லா கட்டுமானங்கள் இடிப்பு கட்டணம் (Demolition charges - unauthorised construction) = 370
-- இதர வருவாய் (Other income) = 14,88,625
-- அம்மா உணவகம் (Sales and products (Amma unavagam)) = 11,37,343
-- முதலீடுகள் மூலம் வருவாய் (Interest from investments) = 69,808
-- வங்கிமூலம் வட்டி வருவாய் (Interest from banks) = 82,35,558
-- திட்டங்கள் நிறைவேற்ற ஒதுக்கப்பட்ட தொகை (Project overhead appropriation expenses) = 16,93,565
-- பூங்கா கட்டணம் வசூல் (Garden / park receipts) = 22,160
நாம் மேலே கண்டது போல் - 8 தலைப்புகளுக்கு கீழ் - காயல்பட்டினம் நகராட்சியின், 2016-2017 காலகட்ட வருவாய் 8.84 கோடி ரூபாய்.
அதில் - GRANTS AND CONTRIBUTIONS (மானியங்கள்) தலைப்பிலான 2 கோடி ரூபாய் வருவாய் தவிர, இதர தலைப்புகளிலான வருவாய், உறுதியான வருவாய் ஆகும். அதாவது ஒவ்வொரு ஆண்டும், உறுதியாக ஒரு உள்ளாட்சி மன்றத்திற்கு கிடைக்கும் வருவாய்.
GRANTS AND CONTRIBUTIONS (மானியங்கள்) தலைப்பில் - மானியம், எல்லா உள்ளாட்சிமன்றங்களுக்கும், எல்லா ஆண்டுகளும் கிடைப்பதில்லை. ஒரு உள்ளாட்சி மன்றத்தின் தேவையை பொறுத்து - அவ்வப்போது, அரசினால் வழங்கப்படுகிறது.
உதாரணமாக - காயல்பட்டினம் நகராட்சியின் புதிய அலுவலகத்திற்கு திருமதி ஆபிதா சேக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் -Infrastructure Gap Filling Fund என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது; 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டத்திற்கான நிதி UIDSSMT என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.*
எனவே - காயல்பட்டினம் நகராட்சிக்கு, ஒவ்வொரு ஆண்டும், உறுதியான ஆண்டு வருவாய், குறைந்தது 6 கோடி ரூபாய் ஆகும்.
இந்த தொகையை - எவ்வாறு காயல்பட்டினம் நகராட்சி செலவு செய்கிறது என்ற விபரத்தை தொடரும் பாகங்களில் காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 5, 2018; 8:30 am]
[#NEPR/2018110501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|