காயல்பட்டினம் நகராட்சியில், பொதுமக்கள் செலுத்தும் பல்வேறு வரித்தொகை மூலம் ஈட்டப்படும் வருவாயில் 3இல் ஒரு பங்கு – நகராட்சியில் நிரந்தர ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு மாத ஊதியமாகச் செல்கிறது என்ற தகவலை உள்ளடக்கி - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் ஆண்டு ஒன்றுக்கான வருவாய் சுமார் - குறைந்தது 6 கோடி ரூபாய் ஆகும். நாம் ஏற்கனவே கண்டது போல் – இந்தத் தொகைக்கும் கீழ் வருவாய் குறைய வாய்ப்புகள் இல்லை.
மேலும் - தமிழக அரசு மூலம் பெறப்படும், திட்டங்களுக்கான சிறப்பு மானியம் மூலம் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இது உறுதியான வருவாய் அல்ல.
காயல்பட்டினம் நகராட்சி தனது 6 கோடி ரூபாய் வருவாயினை என்ன செய்கிறது?
நகராட்சியின் செலவுகள் - 9 தலைப்புகளுக்கு கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
(A) PERSONNEL COST (SALARIES) (ஊழியர்கள் வகை (சம்பளம்))
(A) PERSONNEL COST (OTHERS) (ஊழியர்கள் வகை (இதர))
(B) TERMINAL & RETIREMENT BENEFIT (ஓய்வூதியம் வகை)
(C) OPERATING EXPENSES (இயக்க செலவுகள்)
(D) REPAIRS & MAINTENANCE (பராமரிப்பு செலவுகள்)
(E) PROGRAM EXPENSES (திட்ட செலவுகள்)
(F) ADMINISTRATIVE EXPENSES (நிர்வாக செலவுகள்)
(G) FINANCE EXPENSES (நிதிவகை செலவுகள்)
(H) DEPRECIATION (தேய்மானம்)
மேலுள்ள தலைப்புகளில், முதல் மூன்று தலைப்புகள் - நகராட்சியின் நிரந்தர ஊழியர்கள் வகையிலான செலவீனங்கள் குறித்தது ஆகும்.
காயல்பட்டினம் நகராட்சியின் நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 50. இதில் 30 பேர் - நிரந்தர துப்புரவு பணியாளர்கள். தற்போது இதில் சுமார் 5 இடங்கள் காலியாகவுள்ளது.
இவர்களின் சம்பள வகைக்கு - ஓர் ஆண்டில், காயல்பட்டினம் நகராட்சி, எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா?
தணிக்கைத்துறை மூலம் கடைசியாக அறிக்கை வெளியான 2016-2017 நிதியாண்டில், ஊழியர்கள் வகைக்கு மட்டும் - காயல்பட்டினம் நகராட்சி, 1.86 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது! ஆம் - வருவாயில் மூன்றில் ஒரு பங்கு, நிரந்தர ஊழியர்கள் வகைக்கு செலவு செய்யப்படுகிறது.
ஊழியர்கள் வகைக்கு - ஒவ்வொரு தலைப்புக்கு கீழ் - செய்யப்பட்ட செலவீனங்கள் கீழே வழங்கப்படுகின்றன.
(A) PERSONNEL COST (SALARIES) (ஊழியர்கள் வகை (சம்பளம்)) (மொத்தம் - 1,57,36,308)
-- Pay including personal pay (ஊதியம்) = 67,00,511
-- Special pay (சிறப்பு ஊதியம்) = 26,125
-- Dearness Allowance (அக விலைப்படி) = 84,35,327
-- House Rent Allowance (வீட்டு வாடகைப் படி) = 3,07,847
-- City Compensatory Allowance (மாநகர ஈட்டுப்படி) = 268
-- Conveyance Allowance (ஊர்திப் படி) = 25,827
-- Medical Allowance (மருத்துவ உதவித்தொகை) = 57,440
-- Other Allowance (இதர படி) = 40,963
-- Ex-gratia/Bonus (ஊக்க ஊதியம்) = 1,42,000
(A) PERSONNEL COST (OTHERS) (ஊழியர்கள் வகை (இதர)) (மொத்தம் - 11,08,008)
-- Travel Allowance (பயணப்படி) = 1,33,652
-- Staff Welfare Expenses (ஊழியர் நல செலவுகள்) = 9,74,356
(B) TERMINAL & RETIREMENT BENEFIT (ஓய்வூதியம் வகை) (மொத்தம் - 18,32,983)
-- Special PF cum gratuity (சிறப்பு PF மற்றும் பணிக்கொடை) = 38,285
-- Group insurance - management contribution (குழும காப்பீடு - நிர்வாக பங்கு) = 61,380
-- Contribution to employees PF (ஊழியர் PF வகை) = 17,33,318
2016 - 2017 நிதியாண்டில், நகராட்சியின் நிரந்தர ஊழியர்கள் வகைக்கு மட்டும் 1,86,77,299 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வகைக்கு போக, நகரின் இதர பணிகளுக்கு - எஞ்சும் தொகை - சுமார் 4.5 கோடி ரூபாய் ஆகும். இந்த மீதி 4.5 கோடி ரூபாய் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 5, 2018; 5:30 pm]
[#NEPR/2018110502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|