நியாய விலைக் கடைகளில் உள்ள பொருட்கள் விபரம் குறித்து அறிதல், சேவை முறைகேடுகள் செய்யும் கடைகள் மீது முறையீடு செய்தல் தொடர்பான தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
ரேஷன் கடைகளை பயன்படுத்தும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பல.
அவற்றில் குறிப்பாக -
கடை திறந்துள்ளதா என தெரியவில்லை,
பொருட்கள் உள்ளதா என தெரியவில்லை,
அதிகமான தொகை வாங்குகிறார்கள்
போன்ற பிரச்சனைகள் அடிக்கடி எழுகின்றன.
இவற்றை எவ்வாறு கையாளுவது?
குறுச்செய்தி (SMS) மூலமாக சில அடிப்படை தகவல்களை பொது மக்கள் பெற தமிழக அரசு வழிவகுத்துள்ளது. இந்த சேவையை - ரேஷன் அட்டையோடு இணைக்கப்பட்டுள்ள மொபைல் இணைப்பிலிருந்து பெறலாம்.
99809 04040 என்ற எண்ணுக்கு, பதிவு செய்யப்பட்ட கைபேசியில் (REGISTERED MOBILE) இருந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பி தகவல்கள் பெறலாம்.
PDS <இடைவெளி> 101 என குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
PDS <இடைவெளி> 102 என குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது) அறியலாம்
PDS <இடைவெளி> 107 என குறுஞ்செய்தி அனுப்பி உங்கள் நியாய விலைக் கடையில் வாங்கப்படும் கட்டண தொகை பற்றிய புகார்கள் தெரிவிக்கலாம்
மேலும் - ரேஷன் கடைகளை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிலும் வட்டார வழங்கல் அலுவலர் (TALUK SUPPLY OFFICER; TSO) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காயல்பட்டினம் உள்ளடக்கிய திருச்செந்தூர் தாலூக்காவிற்கான வட்டார வழங்கல் அலுவலர் (TSO) தொடர்பு விபரங்கள்:
04639-242229
94450 00373
tsotut.thiruchendur@tn.gov.in
தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரேஷன் கடைகளை சோதனை செய்யும் பறக்கும் படை (FLYING SQUAD) தொடர்பு எண்:
94450 45629
புகார்களை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்ல (ESCALATION) தொடர்பு எண்கள்:
மாவட்ட வழங்கல் அலுவலர் (DSO): 94450 00370
மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் (DRO): 94450 00929
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 4, 2018; 9:30 am]
[#NEPR/2018110401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|