ஷாதுலிய்யா தரீக்காவின் தலைமையகமான காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யாவின் 150ஆம் ஆண்டு விழா, ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு, ஜாவியா அரபிக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் - வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 05, 06 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ளதாகவும், அந்நாட்களில் வேறு பொது நிகழ்ச்சிகளையோ - குடும்ப நிகழ்ச்சிகளையோ நடத்தாமல் தவிர்த்து ஒத்துழைக்குமாறும் அந்நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வேண்டுகோள் அறிக்கை வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்...
மெஞ்ஞான வழிக்காட்டும் மறைஞானம் நிறைந்த மாமன்றமாம் காயல்பட்டினம் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் 150ஆம் ஆண்டு நிறைவு நினைவு விழா மற்றும் ஷாதுலிய்யா தரீக்காவின் ஆன்மிக மாநாடு ஆகிய இரு பெரும் விழாக்கள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு) நடைபெற இருக்கின்றது.
இவ்விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நனிசிறப்புடன் நடந்தேற தாங்கள் அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அத்துடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விழா நாட்களில் – தயவுசெய்து வேறு நிகழ்ச்சிகளுக்கு நாள் நிச்சயிக்காமல் தவிர்த்து, தங்களது முழு ஒத்துழைப்பைத் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இணையில்லாக் கிருபையாளன் அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலக நற்பேறுகளையும் நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவண்,
150ஆம் ஆண்டு நிறைவு நினைவு விழாக்குழு,
ஜாவியத்துல் ஃபாஸிய்யத்துஷ் ஷாதுலிய்யா,
காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத்
|