காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், 18.11.2018. அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு கலந்துகொள்ளவுள்ளார்.
இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
எதிர்வரும் நவம்பர் 18 ஞாயிறு அன்று, மெகா | நடப்பது என்ன? குழும ஏற்பாட்டில், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி - காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
பிரபல கல்வியாளர் திரு.பிரின்ஸ் கஜேந்திர பாபு பங்கேற்று, சிறப்புரையாற்றவுள்ள இந்நிகழ்ச்சி, பெரிய நெசவு தெருவில் அமைந்துள்ள ஹமீதியா மக்தப் (தைக்கா) உள்ளரங்கில் - காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை - இறைவன் நாடினால் - நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில், இறைவன் நாடினால் -
// தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணம்
// தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் இலவச கல்விக்கான 25 சதவீதம் இடம்
// அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது / தரம் உயர்த்துவது
// கல்வியில் முன்னோடி நகரமாக காயல்பட்டினம் நகரை உருவாக்க செயல்திட்டம்
உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறும்.
==========================
நாள் / நேரம்:
இறைவன் நாடினால் - நவம்பர் 18, 2018 - ஞாயிற்றுக்கிழமை - காலை 9:30 முதல் மதியம் 12:30 வரை
இடம்:
ஹமீதியா மக்தப் (தைக்கா), பெரிய நெசவு தெரு
==========================
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 1, 2018; 7:45 pm]
[#NEPR/2018110101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |