காயல்பட்டினம் புதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் (ஹாங்காங்) உடைய தாயார் தைக்கா தெருவைச் சேர்ந்த சித்தி ஃபாத்திமா, இன்று 00.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,
மர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களது மகளும்,
மர்ஹூம் பி.எஸ்.ஏ.கபீர் அவர்களது மருமகளாரும்,
மர்ஹூம் கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியும்,
புதுப்பள்ளி செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.முஹம்மத் மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர்ரஹ்மான் ஆகியோரின் தாயாரும்,
மர்ஹூம் ஏ.கே.முஹம்மத் பாக்கர், மர்ஹூம் ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோரது சகோதரி மகளும்,
மர்ஹூம் எம்.ஓ.அப்துல் ஹலீம், மர்ஹூம் எம்.ஓ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் எம்.ஓ.புகாரீ, மர்ஹூம் எம்.ஓ.செய்யித் அஹ்மத் ஆகியோரது மூத்த சகோதரியும்,
மர்ஹூம் எம்.எச்.ஷாஹுல் ஹமீத், ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் ஆகியோரது மைத்துனியும்,
எஸ்.எச்.முஹம்மத் ஹஸன் என்பவரது பெரிய தாயாரும்,
பி.ஷேக் அப்துல் காதிர், எஸ்.ஏ.உமர், எஸ்.ஏ.அப்துல் காதிர் முஹம்மத் இக்பால் ஆகியோரது மாமியும்,
ஆர்.எம்.முஹம்மத் முல்தஜிம் என்பவரது தந்தையின் தாயாரும்,
எஸ்.ஏ.முஹம்மத் ஷகீல் என்பவரது தாயாரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை 10.00 மணிக்கு, புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 08:05 / 14.11.2018.] |