இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதன் தீங்கை விளக்கியும், போதை ஒழிப்பை வலியுறுத்தியும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குறும்படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். அவர்களின் சமூகச் சிந்தனையைப் பாராட்டி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாராட்டறிக்கை:-
போதை பழக்கத்தின் பாதிப்பு குறித்து கடந்த சில ஆண்டுகளாக - காயல்பட்டினத்தில் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
மெகா | நடப்பது என்ன? குழுமம் இது சம்பந்தமாக பல்வேறு முயற்சிகளை கடந்த காலங்களில் செய்துள்ளது. நகரின் வேறு சில அமைப்புகளும் இது குறித்து பல்வேறு முயற்சிகளை செய்துவருகின்றன.
இதற்கிடையே - CREATIVE CREW என்ற பெயரில் செயலாற்றும் காயல்பட்டினம் சார்ந்த இளைஞர்கள், போதை என்ற தலைப்பில் சுமார் 11 நிமிடம் நீளம் கொண்ட குறும்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த குறும்படத்தினை பார்வையிட கீழ்காணும் இணைப்பினை சொடுக்கவும்:
https://www.youtube.com/watch?v=OiPJwa4WxyM&feature=youtu.be
எவ்வாறு போதை பழக்கம் துவங்குகிறது, எவ்வாறு அது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதனை எளிமையாகவும், தத்ரூபமாகவும் - CREATIVE CREW இளைஞர்கள் படம் பிடித்துள்ளார்கள்.
நகரின் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு முயற்சிகளில் இது ஒரு முக்கிய பங்களிப்பு என்றால் அது மிகையாகாது.
இந்த குறும்படத்தினை -
இயக்கிய முத்துக்குமார்
தொகுத்த சைபுர் ரஹ்மான்
குறும்படத்தில் நடித்த
முத்துக்குமார்
சைபுர் ரஹ்மான்
சாஹில்
அஸ்ஃபாக்
ஃபஹத்
ஜுஹைர்
முஹம்மது அலி
ஆகியோருக்கு மெகா | நடப்பது என்ன? குழுமம் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 30, 2018; 9:30 am]
[#NEPR/2018103001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|