காயல்பட்டினம் கடைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளிக்கூடங்களில் பயிலும் சிறுவர் – சிறுமியருக்கான மார்க்கக் கல்விப் பிரிவு – மக்தப் மத்ரஸா – பள்ளி வளாகத்தில் அண்மையில் புதிதாகத் துவக்கப்பட்டது.
அங்கு பயிலும் மாணவ-மாணவியரின் சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், 23.10.2018. செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணிக்குத் துவங்கி, 21.00 மணி வரை நடைபெற்றது.
பள்ளியின் துணைத் தலைவர் செய்யித் இப்றாஹீம், செயலாளர் நூருத்தீன், பொருளாளர் ஜெய்லானீ, குருவித்துறைப் பள்ளி கணக்கர் எம்.ஏ.அஹ்மத் லெப்பை, ஹாஃபிழ் மீரா ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாமிதிய்யா மாணவர் ஹாஃபிழ் எம்.ஐ.நூர் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கடைப்பள்ளி & மத்ரஸா தலைவர் மீரான் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். மக்தப் முதல்வரும் - குருவித்துறைப் பள்ளியின் துணை இமாமுமான மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் வரவேற்றதோடு, மக்தப் மத்ரஸா குறித்து அறிமுகவுரையும் ஆற்றினார்.
குருவித்துறைப் பள்ளியின் இணைச் செயலர் கே.எம்.செய்யித் அஹ்மத், அதன் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ‘முத்துச் சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
தொடர்ந்து, மக்தப் மாணவ – மாணவியரின் சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரபி – தமிழ் உரைகள், நல்லொழுக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் – இஸ்லாம் மார்க்க விழுமியங்களை உணர்த்தும் வகையிலுமான உரையாடல்கள், தஃப்ஸ் முழக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதில் அடக்கம்.
நன்றியுரையைத் தொடர்ந்து, கடைப் பள்ளி இமாம் செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இதில், கடைப்பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
|