காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், நேற்று (02.11.2018. வெள்ளிக்கிழமை) அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்காக பள்ளிக்கு வந்த அதன் இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத், ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த அலுவலகக் கதவு திறந்திருப்பதைக் கண்ணுற்று அங்கு சென்று பார்த்தபோது, அலுவலக வாசல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த நன்கொடை உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 4 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதையும் அவர் கண்டறிந்தார்.
தொழுகை முடிந்ததும், அனைவரையும் அழைத்து அவர் விபரம் கூற, அங்கு பரபரப்பு நிலவியது. அனைவரின் ஆலோசனையின் படி, பின்னர் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளது.
|