காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் எனும் புதுப்பள்ளி, தரைமட்டத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீர் பள்ளிக்குள்ளும் தேங்கி, தொழ வழியற்ற நிலை ஏற்படுவது வாடிக்கை. இதனைக் கருத்திற்கொண்டும், தொழுகையாளிகள் வரவுக்கேற்ப பள்ளியில் போதிய இடவசதி இல்லாமையைக் கருத்திற்கொண்டும், இப்பள்ளியின் பழைய கட்டிடத்தை அகற்றி, சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்துக் கட்ட தீர்மானிக்கப்பட்டு, 27.05.2016. வெள்ளிக்கிழமையன்று 16.30 மணியளவில், பள்ளி தலைவர் எஸ்.எம்.உஸைர் தலைமையில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ துஆ பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன.
தற்போது ஓரளவுக்கு கட்டிடம் உயர்ந்துள்ள நிலையில், அதன் நிகழ் நிலவரத்தை விளக்கும் படக்காட்சிகள்:-
|