காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW அமிலக்கழிவு தொழிற்சாலையிலிருந்து கழிவு நீரைக் கடலில் திறந்துவிட்டதையடுத்து, கடலோரத்தில் மீன்கள் செத்து ஒதுங்கியுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் அமைந்துள்ள DCW தொழிற்சாலை - வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் (அக்டோபர் - டிசம்பர்), கழிவு நீர்களை கடலில் கலந்துவிடுவது வழமை.
நேற்று இத்தொழிற்சாலை - அதற்கு தென்புறம் உள்ள தாமிரபரணி கிளை ஓடையில் கழிவுகளை திறந்துவிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் விளைவாக - இன்று காலை, காயல்பட்டினம் கடற்கரையோரம் மீன்கள் இறந்து கிடந்தன.
இது சம்பந்தமான புகார் - கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி, சுற்றுச்சூழல் துறை, மீன்வளத்துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டுவாரியம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 28, 2018; 12:15 pm]
[#NEPR/2018102801]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|