காயல்பட்டினம் நகராட்சியால் செலவழிக்கப்படும் வகைகள் குறித்த தகவலை உள்ளடக்கி - காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் ஆண்டு வருவாய் குறைந்தது 6 கோடி ரூபாய் என்றும், இந்த தொகை - அரசு மானியம் வழியிலான திட்டங்கள் காரணமாக சில ஆண்டுகளில் கூடுதலாக இருக்கும் என்றும் முந்தைய பாகங்களில் நாம் கண்டோம்.
2016 - 2017 நிதியாண்டில், தணிக்கைத்துறை அறிக்கைப்படி, மானியம் தொகை சேர்த்து, காயல்பட்டினம் நகராட்சியின் ஆண்டு வருவாய் - 8.8 கோடி ரூபாய் ஆகும்.
முந்தைய பாகங்களில், எவ்வாறு, அந்த தொகையில் குறைந்தது 3.7 கோடி ரூபாய், ஊழியர் சம்பளம் மற்றும் _நகராட்சியின் அடைப்படை சேவைகள் _ வகைக்கு செலவு செய்யப்பட்டது என்பதை கண்டோம்.
மீதி தொகையை நகராட்சி எவ்வாறு செலவு செய்தது?
மீதி தொகைக்கான செலவு விபரங்களை, தணிக்கைத்துறை, கீழ்க்காணும் மூன்று தலைப்புகளுக்கு கீழ் கொண்டு வருகிறது.
(F) ADMINISTRATIVE EXPENSES (நிர்வாக செலவுகள்)
(G) FINANCE EXPENSES (நிதிவகை செலவுகள்)
(H) DEPRECIATION (தேய்மானம்)
இந்த மூன்று தலைப்புகள் கீழான மொத்த செலவுகள் (2016-17 நிதியாண்டில்) - 3,99,59,972 ரூபாய்.
இந்த தலைப்புகளுக்கு கீழ், உட்பிரிவுகள் வாரியாக என்னென்ன செலவுகள் பதிவாகியுள்ளன என்பதை காண்போம்.
(F) ADMINISTRATIVE EXPENSES (நிர்வாக செலவுகள்) (மொத்தம் - 2,90,33,105)
-- Telephone charges (தொலைபேசி வகை செலவுகள்) = 1,24,807
-- Legal expenses (வழக்குகள் வகை செலவுகள்) = 1,07,000
-- Stationery and printing (ஸ்டேஷனேரி வகை செலவுகள்) = 5,13,163
-- Advertising charges (விளம்பரம் வகை செலவுகள்) = 5,88,584
-- Other expenses (இதர செலவுகள்) = 94,10,333
-- Computer operational expenses (கணினி வகை செலவுகள்) = 24,360
-- Contribution to other funds (இதர திட்டங்களுக்கு பங்களிப்பு) = 1,04,27,813
-- Postage and telegrams (தபால் வகை செலவுகள்) = 15,000
-- Electricity consumption charges (மின்சார பயன்பாடு செலவுகள்) = 78,11,245
-- Sitting fees for the councillors (உறுப்பினர்கள் கூட்ட அமர்வு படி) = 10,800
(G) FINANCE EXPENSES (நிதிவகை செலவுகள்) (மொத்தம் - 40,75,808)
-- Provision for doubtful collection - revenue (வசூல் செய்யமுடியாத வரி - சந்தேகம் - வகை) = 23,98,924
-- Bank charges (வங்கி வகை செலவுகள்) = 5,818
-- Interest on loans / ways and means / advance / overdraft (கடனுக்கான வட்டி போன்ற வகைகளுக்கு) = 16,18,708
-- Audit fees (தணிக்கை கட்டணம்) = 52,358
(H) DEPRECIATION (தேய்மானம்) (மொத்தம் - 1,24,60,225)
-- Depreciation (தேய்மானம்) = 1,24,60,225
மேலே காணப்படும் செலவீனங்களில் குறிப்பிடும்படியானவை -
// மின்சாரப்பயன்பாடு வகைக்கான செலவு 78 லட்சம் ரூபாய்,
// இதர செலவுகள் (Other Expenses) - 94 லட்சம் ரூபாய் மற்றும்
// இதர திட்டங்களுக்கு நகராட்சியின் பங்கு - 1.04 கோடி ரூபாய்
மின்சாரச் செலவு என்பது நகரின் தெருவிளக்குகள் பராமரிப்புக்காக மின்பயன்பாடு, குடிநீர் விநியோகம் இடத்தில் மோட்டார் பயன்பாடு (இது வரை மேல ஆத்தூர்; இனி - பொன்னங்குறிச்சி) ஆகியவற்றையும் சேர்த்து.
இதர செலவுகள் / இதர திட்டங்களுக்கு நகராட்சியின் பங்கு வகையிலான செலவு - என்பது நகரில் மேற்கொள்ளப்படும், அடிப்படை வசதிகள் பணிகள் தவிர பிற பணிகளுக்கான செலவீனங்களை அடக்கும்
அனைத்து செலவீனங்கள் போக - அவ்வாண்டு மிஞ்சும் தொகையை, EXCESS OF INCOME OVER EXPENDITURE என்ற தலைப்புக்கீழ், தணிக்கைத்துறை பதிவு செய்கிறது.
இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். சில ஆண்டுகளில், அவ்வாண்டுக்கான வருவாயை விட செலவீனங்கள் கூடுதலாக இருக்கும்; சில ஆண்டுகளில் - வருவாயை விட செலவீனங்கள் குறைவாக இருக்கும்.
2016 - 2017 ஆம் ஆண்டு - செலவீனங்கள் போக, எஞ்சிய தொகை - 68,61,059
அடுத்த பாகத்தில், நாம் இதுவரை கண்ட நிதிநிலைப்படி, காயல்பட்டினம் நகராட்சியில் வரி உயர்வு அவசியமா; வீண் விரையம் செய்யப்படும் செலவீனங்களை குறைத்தாலே, நிறுத்தினாலே - அதற்கான அவசியம் நீங்குமா என காண்போம்.
[தொடரும்]
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 7, 2018; 9:30 am]
[#NEPR/2018110701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|