காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் – மகுதூம் ஜும்ஆ பள்ளியையொட்டிய பகுதி குண்டுங்குழியுமாகக் காணப்படுகிறது. தற்காலத்தில் பெய்து வரும் மழை காரணமாக இப்பகுதியில் அடிக்கடி தண்ணீர் தேங்கி, அப்பகுதியைக் கடந்து செல்வோருக்குப் பெரும் அச்சுறுத்தலை அளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறிருக்க, காயல்பட்டினம் நகராட்சி சார்பில் பள்ளமான அப்பகுதிகளில் கருங்கல், மணல் அடங்கிய கலவையை இட்டுச் சமப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதுபோன்று இதற்கு முன் பெரிய நெசவுத் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்காலங்களின்போது பராமரிப்புப் பணி என்ற பெயரில் நகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வெறும் மணல் மட்டும் பரத்தப்பட்டதையடுத்து பெய்த மழையில், அவை ஏற்கனவே இருந்ததை விட போக்குவரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்துவிட்டன.
படங்கள்: கோப்பு
எனவே, தற்போது மேற்கொள்ளப்படும் பணிகளையாவது முறைப்படி - சரியான கலவையுடன் செய்து, மக்களுக்குப் பயனுள்ளதாக்க வேண்டிய கடமை நகராட்சிக்கு உள்ளது என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறினர். |