காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் – நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான கஞ்சிப்பறை கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என முன்னர் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி, 13.11.2018. செவ்வாய்க்கிழமையன்று 10.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளி துணைத் தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத் தலைமை தாங்கி, கட்டுமானப் பணிக்கான முதல் அடிக்கல்லை நாட்டினார். தொடர்ந்து - இணைச் செயலாளர்களான எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், முன்னாள் இணைச் செயலாளர் எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல், கணக்கர் எம்.ஏ.அஹ்மத் லெப்பை, அங்கத்தினரான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.), கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஏ.காஜா முஈனுத்தீன், நஹ்வீ எஸ்.எஸ்.யஃகூத், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கற்களை எடுத்துக் கொடுத்தனர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |