காயல்பட்டினத்தில் – ஒரே குடும்பத்தில் உடன்பிறந்த இரண்டு சகோதரர்கள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர்.
காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்தவர் இஸ்மாஈல்; வயது 65. இவர் சென்னை மண்ணடி மூர் தெருவில் வசித்து வந்தவர். சுகவீனம் காரணமாக சில மாதங்களாக காயல்பட்டினத்தில் ஓய்வில் இருந்து வந்தார்.
அவரது உடன்பிறந்த தம்பி அஹ்மத் முஹ்யித்தீன்; வயது 60. மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த இவரும் சென்னையில் வணிகம் செய்து வந்தார்.
நேற்று (15.11.2018. வியாழக்கிழமை) மாலையில் அஹ்மத் முஹ்யித்தீன் சென்னையில் காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான காயல்பட்டினத்திற்கு இரவில் வந்துகொண்டிருந்த வேலையில், 20.30 மணிக்கு, அவரது மூத்த சகோதரர் இஸ்மாஈலும் காலமானார். இருவரது உடல்களும், இன்று காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அடுத்தடுத்து இவ்விருவரும் காலமானது, சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்களைப் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2. Re:...CONDOLENCE posted byS.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR)[18 November 2018] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46311
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى،
وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى،
فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!!
மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும்.
ஆதாரம் :- புகாரி -7377
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family.
Aameen!
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross