காயல்பட்டினத்தில் நேற்று 22.50 மணி முதல் இன்று அதிகாலை வரை சிற்சிறு இடைவெளிகளுடன் இதமழை பெய்துள்ளது. இதனால், நகரின் பெரும்பாலான சாலைகளது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 07.30 மணி நிலவரப்படி, வானிலை இதமாக உள்ளது. வெயில் இல்லை. அடுத்து எந்நேரமும் மழை பெய்யலாம் எனக் கருதும் அளவில் வானம் மேகமூட்டத்துடன் கறுத்துக் காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள மழைப்பொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 42 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.. குளு குளுவென குளிர்ச்சியான காட்சிகள்.. நம் தாய்நகராம் காயல்பதியை வெளி உலகில் இருந்து, நிழல் படங்களை காணும்போது மிக அருமையாகவே இருக்குகிறது. இதன் அருமை ஊரில் இருக்கும் போது அது பெரிதாக தெரிவதில்லை. மன ஏக்கங்களும், ரசனையும் கடல் கடந்து பிரிந்து வாழும்போதே புரிகிறது.
வல்ல அல்லாஹ் நமது காயல்பதியை குளு குளுவென எப்போதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன், நோயில்லா நன்னகராக சிறந்து விளங்க அருள் புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross