இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினத்தில் பல்வேறு ஆன்மிக மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் மீலாத் விழாக்கள் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியில் இயங்கி வரும் குர்ஆன் மத்ரஸாவில், 21.11.2018. புதன்கிழமையன்று, நபிகளார் மீது ஸலவாத் ஓதும் நிகழ்ச்சியும், அவர்களது புகழோதும் மவ்லித் மஜ்லிஸும் நடைபெற்றன.
மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.
|